ஜெ. துணிவு எங்களுக்கு இல்லை- வேறவழி இல்லாததால் பாஜகவுக்கு ஆதரவு- திண்டுக்கல் சீனிவாசன் சபாஷ் பேச்சு

Posted By:
Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: ஜெயலலிதாவுக்கு இருந்த துணிச்சல் எங்களுக்கு இல்லாததால் வேறு வழியில்லாமல் பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்கிறோம் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி அறிவித்த வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்றால் அதிமுகவின் தயவு பாஜகவுக்கு தேவை என்று கூறப்பட்டு வந்தது. இதற்காக டிடிவி தினகரனுக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டதாகவும், ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன.

ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டார். அவருக்கு ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் கட்சி, டிஆர்எஸ், சிவசேனை உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

 அதிமுக அணிகள்

அதிமுக அணிகள்

பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார். இதற்கிணங்க, எடப்பாடி பழனிச்சாமியும் ஆதரவு தருவதாக அறிவித்தார்.

 ஓபிஎஸ், தினகரன் ஆதரவு

ஓபிஎஸ், தினகரன் ஆதரவு

மேலும் ஓபிஎஸ் அணியினரும் ஆதரவு தருவதாக அறிவித்தனர். இந்த அணிகளின் முடிவை டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் எதிர்த்தனர். பின்னர் அவர்களும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தருவதாக அறிவித்தனர்.

 திண்டுக்கல்லில்...

திண்டுக்கல்லில்...

தற்போது உள்ள தமிழக அரசியல் சூழலில் பா.ஜ.க.வுடன் வேறு வழியில்லாமல் அனுசரித்து செல்ல வேண்டிய அரசியல் சூழலில் உள்ளோம் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். திண்டுக்கல்லில் உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் அவ்வாறு கூறினார்.

 பெண் சிங்கம்

பெண் சிங்கம்

அவர் கூறுகையில், அம்மா முதல்வராக இருந்த போது யாருடனும் கூட்டணி சேரவில்லை. சிங்கம் போல் தனித்து நின்றார். 37 நாடாளுமன்ற எம்.பி.க்கள், 13 மாநிலங்களவை எம்.பி.க்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி அதிமுகவை இந்தியாவிலேயே மூன்றாவது இடத்திற்கு கொண்டு வந்தார்.

 துணிவு கிடையாது

துணிவு கிடையாது

அம்மா இறந்ததற்கு பிறகு அந்த துணிவு எங்களுக்கு கிடையாது. ஊரோடு ஒத்து போவது என்பது போல தமிழ்நாட்டுக்கு நல்லது செய்வதற்காக அன்புடன் இணைந்து செயல்படுகிறோம். மேலும் வேறு வழியில்லாமல் இதை செய்கிறோம் என்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Dindigul Srinivasan saya that the courage that have in jayalalitha is not in us. so we are supporting bjp for state interests.
Please Wait while comments are loading...