For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுசூதனன் அணிக்கு இரட்டை இலை சின்னம்.. நீதிமன்றத்தில் அப்பீல்: புகழேந்தி அதிரடி

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் ஆணையம் இன்று தீர்ப்பு? அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு- வீடியோ

    சென்னை: இரட்டை இலை சின்னம் எடப்பாடி அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதற்கு எதிராக நீதிமன்றத்தை நாட உள்ளதாக டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

    இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில் டிவி சேனலுக்கு பேட்டியளித்தார் கர்நாடக மாநில புகழேந்தி.

    இவர் டிடிவி தினகரன் ஆதரவாளராக அறியப்படுபவர். சசிகலாவுக்கும் நெருக்கமானவர்.

    அதிகாரப்பூர்வ தகவல்

    அதிகாரப்பூர்வ தகவல்

    புகழேந்தி மேலும் கூறியதாவது: இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஒதுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை. டிவி சேனல்களில் வெளியான செய்தி அடிப்படையில்தான் நான் கருத்து சொல்கிறேன்.

    அதிமுக வேறு கதை

    அதிமுக வேறு கதை

    ஒருவேளை அப்படி எதிரணிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டால் அது அநீதியாகும். உ.பி.யில் தந்தை மகன் நடுவே தகராறு நடைபெற்று சின்னத்திற்காக சமாஜ்வாதி கட்சியினர் சண்டை போட்டதையும், அதிமுக விவகாரத்தையும் ஒன்றாக கருத முடியாது.

    அவசரம்

    அவசரம்

    அதிமுகவில் பொதுச்செயலாளர் யார் என்பதே இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. பல வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில், அவசரமாக இந்த தீர்ப்பை வெளியிட வேண்டிய அவசியமே இல்லை.

    உள்ளாட்சி தேர்தல்

    உள்ளாட்சி தேர்தல்

    அவசரமாக சின்னத்தை ஒதுக்கி அவசரமாக உள்ளாட்சி தேர்தலை நடத்துவது, இடைத் தேர்தலை நடத்துவது போன்ற வேலைகளில் எடப்பாடி அணி ஈடுபட வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    நீதிமன்றம் போவோம்

    நீதிமன்றம் போவோம்

    உடனடியாக இந்த தீர்ப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். எங்கள் அணியில் எந்த வித குழப்பமும் கிடையாது. இவ்வாறு புகழேந்தி தெரிவித்தார்.

    English summary
    We will go to the court against twoleaves symbol judgment, says TTV Dhinakaran faction's Pugazhendi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X