அம்பாசமுத்திரம் புலிகள் சரணாலயத்திற்கு இணையதளம் துவக்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  இன்றுமுதல் அம்பாசமுத்திரம் புலிகள் சரணாலயம் இணையதளம் துவக்கம்-வீடியோ

  நெல்லை: அம்பாசமுத்திரம் புலிகள் சரணாலயத்திற்கு இணையதளம் துவக்கப்பட்டு இருக்கிறது. இன்று முதல் அந்த இணையதளம் செயல்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

  நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் உலகப் புகழ்பெற்றது ஆகும். இங்கு நாள்தோறும் அதிக எண்ணிக்கையில் மக்கள் வந்து செல்கிறார்கள்.

  Website opened for Thirunelveli tiger sanctuary

  தற்போது இந்த பகுதிக்காக சுற்றுலா இணைய சேவை தொடங்கப்பட்டு இருக்கிறது. சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இந்த இணையதளம் செயல்படும்.

  களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பாசமுத்திரம் துனை இயக்குநர் பார்கவ தேஜா இதை திறந்து வைத்தார். அவர் கூறுகையில் ''புலிகள் சரணாலத்திற்காக புதிய இணைய தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. www.kmtrecotourism.com என்ற இணையதள முகவரி மூலம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் குறித்த அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Website opened for Thirunelveli tiger sanctuary. The website named 'www.kmtrecotourism.com' will be active from today.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற