• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜாதி, மதத்தால் மக்களை பிரித்து வன்முறையை தூண்டும் வாட்ஸ்-அப் குரூப்புகள்!

By Veera Kumar
|

சென்னை: அறிவியல் வளர்ச்சி மனிதனை செழுமைப்படுத்த வேண்டுமே தவிர, சீரழிக்க கூடாது. அப்படியாகிவிட்டால் அறிவியல் என்ற சொல்லை வழக்கொழித்துவிட்டு இலைகளை கட்டிக்கொண்டு மீண்டும் ஆதிவாசியாய் போய்விடுவது நலம்.

அறிவியல் முன்னேற்றத்தை வைத்துக்கொண்டு, உலகம் அடுத்தகட்டம் நோக்கி நகர்கையில், இந்தியாவில், அதிலும் தமிழர்கள், விஞ்ஞானத்தோடு வீம்பாக விளையாடிக்கொண்டுள்ளதன் கண்கூடுதான், வாட்ஸ்-அப் அத்துமீறல்கள். குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல, வாட்ஸ்-அப் சில வீணர்கள் கையில் சிக்கி வம்பை வளர்த்துக் கொண்டுள்ளது.

நெருக்கம் வளர்ப்பு

நெருக்கம் வளர்ப்பு

பேஸ்புக்கின் வளர்ப்பு மகன் வாட்ஸ்-அப் இல்லாத ஸ்மார்ட் போன்களே இல்லை எனும் நிலைதான் தமிழகத்தில். குடும்பங்கள், நண்பர்கள் என ஒவ்வொருவரும் ஒரு குரூப்பை உருவாக்கி தங்கள் நெருக்கத்தை வளர்க்கின்றனர்.

தொழிலுக்கு உதவி

தொழிலுக்கு உதவி

பத்திரிகையாளர்கள் செய்திகளை பகிரவும், மருத்துவர்கள் புதிய கண்டுபிடிப்புகளையும், மருத்துவ கான்பரன்ஸ் தகவல்களை ஷேர் செய்யவும், வழக்கறிஞர்கள் புதிய வழக்குகள் பற்றிய விவரங்களை அறியவும் வாட்ஸ்-அப் குரூப்புகளை உருவாக்கி வைத்துள்ளனர்.

நாட்டை கெடுக்கும் குரூப்புகள்

நாட்டை கெடுக்கும் குரூப்புகள்

மேற்கண்டவையெல்லாம் ஆக்கப்பூர்வமானவை. ஆனால், மதங்களுக்கும், ஜாதிகளுக்கும், பலான விஷயங்களுக்கும் குரூப்பை ஆரம்பித்து தானும் கெட்டு, நாட்டையும் கெடுப்போரால்தான் வாட்ஸ்-அப் நோக்கம் நொடிந்துள்ளது. ஜாதிக் கலவரங்களுக்கு மட்டுமல்ல, ஊர்விட்டு வெளியூர் போய் பிழைப்பு நடத்துவதற்கும் தென்மாவட்டங்கள் ஃபேமஸ்.

ஊர்க்காரர் குரூப்புகள்

ஊர்க்காரர் குரூப்புகள்

சென்னை, திருப்பூர், கோவை என ஊருக்கொருவராக பிரிந்த ஊர்க்காரர்கள் வாட்ஸ்-அப் மூலம் இணைந்து கொள்கின்றனர். இந்த ஊர் குரூப் பெரும்பாலும் ஒத்த ஜாதியுடையோரால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இப்படித்தான், தென் மாவட்டத்து கிராமத்தை சேர்ந்த ஒருவரின் வாட்ஸ்-அப் குரூப் மெசேஜை பார்க்க நேரிட்டது.

ரத்தம் சொட்டுது

ரத்தம் சொட்டுது

அந்த மெசேஜில், அரிவாள் ஒன்று, ரத்தம் சொட்ட, சொட்ட இருப்பது போன்ற படம் ஷேர் செய்யப்பட்டுள்ளது. அந்த அரிவாள் மீது ஒரு ஜாதி பெயர் எழுதப்பட்டிருந்தது. அந்த ஜாதிக்காரர்கள் அரிவாளை எடுத்து ரத்தம் பார்ப்பது சகஜம் என்பது படத்தின் பொருள். இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த ஜாதியின் எதிர் கோஷ்டி ஜாதியை சேர்ந்தவர் செல்போனிலும் இதே காட்சியை பார்க்க முடிந்தது. அவர் ஜாதிக்காரர் அதை ஷேர் செய்திருந்தார். ஆனால் அங்கு அவரின் ஜாதி பெயர் அரிவாளில் எழுதப்பட்டிருந்தது.

ரகசியமாக பரப்பலாம்

ரகசியமாக பரப்பலாம்

எந்த ஊருக்கு சென்றாலும், ஜாதி பெருமையை தூக்கிபிடிக்க இந்த ஊர் குரூப்புகள் பெரிதும் உதவுகின்றன. நகர்மயமாதலால் குறைந்த ஜாதியின் தாக்கம், இன்று, வாட்ஸ்-அப் மெசேஜ்களால் உயிர்ப்போடு வைக்கப்படுகிறது. பேஸ்புக்கில் இதுபோல ஜாதி பெயருடன் அரிவாளை போட்டால், பிற ஜாதியினர் வெறுப்புக்கு ஆளாகிவிடுவார்கள், ஆனால், வாட்ஸ்-அப்பில் இவை காதும், காதும் வைத்தாற்போல பரப்பப்படுகிறது.

மத சண்டை

மத சண்டை

இந்துக்களின் வாட்ஸ்-அப் குரூப்பில், இஸ்லாமிய நாடுகளில் எப்போதும் அமைதியின்மை நிலவுகிறதே ஏன் என்ற கேள்வி கேட்டு மெசேஜ் உலவுகிறது. இஸ்லாமிய குரூப்பில், இந்துக்கள் சிலை வழிபாடு செய்வது தப்பானது என்று வீடியோ பதிவு இடம்பெறுகிறது. கிறிஸ்தவ குரூப்புகளில் ஏனைய பிற மதங்கள் விமர்சிக்கப்படுகிறது. இப்படி வாட்ஸ்-அப் என்பது, போன் கான்டாக்டுகளை மட்டுமல்ல, மனிதர்களையும் தனித்தனி குரூப்புகளாக பிரித்துக் கொண்டுள்ளதை உன்னிப்பாக பார்த்தால் புரிந்துகொள்ள முடிகிறது.

ரணகளத்திலும் கிளுகிளுப்பு

ரணகளத்திலும் கிளுகிளுப்பு

இது ஒருபக்கம் என்றால், கிளுகிளு குரூப்கள் அதன் வேலையை செவ்வனே, பார்த்துக்கொண்டுள்ளன. ஆபாச படங்கள், வீடியோக்களை ஷேர் செய்து மகிழ்ச்சியடைவது அவர்கள் பணி. புதிது, புதிதாக வீடியோ அனுப்ப வேண்டும் என்ற வெறியில், காதலியின் அந்தரங்கங்கள் படம்பிடிக்கப்பட்டு வாட்ஸ்-அப்பில் எளிதாக ஷேர் செய்யப்படுகிறது. இதில் பல பெண்கள் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரமும், சுயகட்டுப்பாடும்

சுதந்திரமும், சுயகட்டுப்பாடும்

சமீபத்தில், தேசப்பாதுகாப்புக்காக, வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிக்கலாம் என்ற ஒரு பரிந்துரை மத்திய அரசிடம் வைக்கப்பட்டதற்கே, குய்யோ, முறையோ என்று நாடே கூச்சலிட்டது. ஆனால் கொடுத்த சுந்திரத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துகிறோமா என்றால் அப்போது கருத்து சுதந்திரவாதிகள் காதை மூடிக்கொள்வர். சுந்திரத்தை எதிர்பார்க்கும் நாம், சுய கட்டுப்பாட்டை மதிப்பதில்லை. தனிமை பாதுகாக்கப்பட வேண்டும் என கூறும் நாம், தரம் தாழ்ந்துவிட கூடாது என்று நினைப்பதில்லை. உரிமையை கேட்கும் நாம், கடமையை செய்வதில்லை.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Whatsapp groups making people separate islands as they operated in the basic of Caste, Religion.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more