For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செல்போனில் மட்டுமில்லை, இனிமேல் வாட்ஸ்அப்பை கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தலாம்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: செல்போன்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த வாட்ஸ்அப் அப்ளிகேஷனை இனிமேல் கம்ப்யூட்டர்களிலும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

பேஸ்புக், டுவிட்டரை போல மிகவும் பிரபலமான சமூக வலைத்தளமாக மாறியுள்ளது வாட்ஸ்அப். மற்ற இரு அப்ளிகேஷன்களையும் செல்போன் மற்றும் டெஸ்க்டாப்களில் பயன்படுத்த முடிந்தபோதிலும், வாட்ஸ்அப்பை கம்ப்யூட்டர்களில் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. அப்படியே பயன்படுத்த வேண்டும் என்றாலும், BlueStacks என்ற ஆண்ட்ராய்டு எமுலேட்டர் சாஃப்ட்வேரைத்தான் பயன்படுத்த வேண்டியிருந்தது. அந்த கஷ்டத்தை தற்போது வாட்ஸ்அப் மாற்றியுள்ளது.

க்ரோம் பிரவுசர்களில் வசதி

க்ரோம் பிரவுசர்களில் வசதி

https://web.whatsapp.com என்று க்ரோம் பிரவுசரில் டைப் செய்தால் வாட்ஸ்அப்பை கம்ப்யூட்டரில் பயன்படுத்திக்கொள்ள முடியும். முதல்கட்டமாக க்ரோம் புரவுசர்களில் மட்டுமே இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. படிப்படியாக பிற பிரவுசர்களிலும் வாட்ஸ்அப் பயன்பாடு நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது.

ஸ்கேன் செய்யுங்கள்

ஸ்கேன் செய்யுங்கள்

இருப்பினும், முதல்முறையாக, வாட்ஸ்அப்பை கம்ப்யூட்டரில் பயன்படுத்துவது சற்று நேரம் பிடிக்கும் நடைமுறைதான். நமது மேலே குறிப்பிட்ட வெப்சைட் முகவரிக்கு சென்று, நமது ஆன்ட்ராய்டு போனில் இருந்து அந்த வெப்சைட்டிலுள்ள 'கியூஆர் கோடை (QR code)'ஸ்கேன் செய்ய வேண்டும். உங்கள் போன் வாட்ஸ்அப் அப்ளிகேஷனில் ஸ்கேன் செய்யும் ஆப்ஷன் எங்கு உள்ளது என்பதும் அந்த வெப்சைட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போனிலிருந்து கம்ப்யூட்டருக்கு

போனிலிருந்து கம்ப்யூட்டருக்கு

உங்கள் போன், வெப்புடன் இணைந்த பிறகே வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியும். மேலும் உங்கள் தொலைபேசியில் இணையதள இணைப்பு தொடர்ந்து இருக்க வேண்டியதும் அவசியம். போனிலுள்ள அத்தனை அம்சங்களும் திரையிலும் எதிரொலிக்கும்.

ஆப்பிளில் இல்லை

ஆப்பிளில் இல்லை

ஆப்பிளின் ஐஓஎஸ் பிளாட்பார்மில் இந்த வசதியை பயன்படுத்த முடியாது என்று கைவிரித்துள்ளது வாட்ஸ்அப். அதே நேரம் ஆன்ட்ராய்ட், விண்டோஸ், பிளாக்பெர்ரி போன்கள் மூலம் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த நடைமுறைகளுக்கு முன்பாக, ஏற்கனவே உங்கள் செல்போனிலுள்ள, வாட்ஸ்அப் அப்ளிகேஷனை அப்கிரேட் செய்துகொள்வது அவசியம்.

வாட்ஸ் அப் பிளஸ்சால் குழப்பம்!

வாட்ஸ் அப் பிளஸ்சால் குழப்பம்!

வாட்ஸ் அப் போன்றே வாட்ஸ் அப் பிளஸ் ( WhatsApp+) என்ற அப்ளிகேஷனை ஆன்ட்ராய்ட் ரக போன் வைத்திருப்பவர்கள் சிலர் பயன்படுத்திவருகின்றனர். இந்த சேவை வாட்ஸ்அப் நிறுவனத்தால் வழங்கப்படவில்லை. எனவே, விதிமுறைகளை மீறியதாக 24 மணி நேரத்திற்கு வாட்ஸ்அப் பிளஸ் தடை செய்யப்பட்டது.

எங்களுக்கு தொடர்பில்லை

எங்களுக்கு தொடர்பில்லை

தடை விதிக்கப்பட்ட வாட்ஸ்அப் பயனாளிகள் குழப்பமடைந்து , வாட்ஸ் அப் நிர்வாகத்திற்கு புகார்கள் தெரிவித்தனர். போனதால், அதுபற்றி அந்நிறுவனமும் விளக்கம் அளித்துள்ளது. அதில், " வாட்ஸ் அப் பிளஸ் அப்ளிகேஷன் வாட்ஸ் அப்- ஆல் உருவாக்கப்பட்டதோ அல்லது வாட்ஸ் அப்- ஆல் அங்கீகரிக்கப்பட்டதோ அல்ல. வாட்ஸ் அப் பிளஸ் அப்ளிகேஷனை உருவாக்கியவர்களுக்கும், எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

தடை நீக்கமில்லை

தடை நீக்கமில்லை

எனவே வாட்ஸ் அப் பிளஸ் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்துள்ளவர்கள், அதனை நீக்கிவிட்டு, வாட்ஸ் அப்-பின் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்றோ அல்லது கூகுள் பிளே மூலமோ வாட்ஸ் அப் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதே சமயம் புதிதாக பதிவிறக்கம் செய்தாலும் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டவர்களுக்கு அத்தடை 24 மணி நேரத்திற்கு அமலில் இருக்கும்" என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

English summary
WhatsApp Web launched today as a way to communicate with your WhatsApp friends using a web browser. The app is an extension of WhatsApp on your phone, meaning that all of your messages will be routed through your device.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X