கேவலமான சீரியல் சீக்கிரம் முடிங்கப்பா இந்த கருமத்த... கடுப்பாகும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பெயர்தான் பிரியமானவள், ஆனால் சீரியல் ரசிகர்களுக்கு கொஞ்சம் கூட பிரியமில்லாதவளாகவே இருக்கிறது. ரசிக கண்மணிகள் சும்மா போட்டு தாக்குகிறார்கள். சன் டிவி இந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வருமா என்றே சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிடத் தொடங்கியுள்ளனர்.

உமா, கிருஷ்ணன் குடும்பத்தினருக்கு தண்ணி காட்டும் கிரி, கூடவே இருந்து குழி பறித்த ஈஸ்வரி, பழிவாங்கும் 3வது மருமகள் என இவர்களை சுற்றியே கதை நகர்வதுதான் போராடிக்கத் தொடங்கிவிட்டது.

இயக்குநருக்கு கதையையும் சீரியலையும் எப்படி நகர்த்துவது என்றே தெரியாமல் கொண்டு செல்கிறார் என்ற புகார் அதிகம் பதிவிடப்படுகிறது. எனவே கூடிய விரைவில் இயக்குநருக்கு எண்ட் கார்டு போடுவார்களா? இல்லை சீரியலுக்கே எண்ட் கார்டு போடுவார்களா என்று தெரியவில்லை.

கிருஷ்ணன் உமா

கிருஷ்ணன் உமா

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து காதலித்து திருமணம் செய்து கொண்ட உமா, கிருஷ்ணன் தம்பதியை பழிவாங்க துடிக்கும் போலீஸ் கிரியின் மனைவி, அவரது மாமா என உப்பு சப்பில்லாத கதையோடு கடந்த 2 ஆண்டுகளாக நகர்கிறது கதை.

சிரிப்பு போலீஸ்களா?

சிரிப்பு போலீஸ்களா?

பிரியமானவள் போலீஸ் எல்லாம் சிரிப்பு போலீஸ் ஆகவே இருக்கிறது. டிசி கிரியை அல்வா போல அள்ளிச் செல்ல முடிந்தும் அல்ப காரணத்திற்காக தப்ப விடுகின்றனர். இன்னும் எத்தனை நாட்களுக்கு தேடப்போகிறார்களோ? எத்தனை நாட்களுக்கு இழுத்தடிக்கப் போகிறார்களோ?

24 மணிநேரம் முடியலையா?

24 மணிநேரம் முடியலையா?

24 மணிநேரத்தில் உமாவின் மகனை கொல்வேன் என்று கிரி சவால் விட அதே 24 மணிநேரத்தில் உன்னை பிடிப்பேன் என்று ரத்னம் சவால் விட இதெல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா ஜவ்விழுப்பு இழுக்கிறாங்களே என்று கடுப்பாகின்றனர் ரசிகர்கள்.

போதும்டா ... தாங்க முடிங்கடா

போதும்டா ... தாங்க முடிங்கடா

சீக்கிரம் சீரியலை முடிங்க இல்லையா நாங்க முடிச்சிக்கிறோம் என்று ரிமோட்டை வைத்து டிவியை ஆஃப் செய்து விட்டு கடுப்போடு படுக்கப் போகும் முன் டுவிட்டர், ஃபேஸ்புக்கில் பிரியமானவள் இயக்குநரை திட்டி பதிவு போட்டு விட்டே உறங்கப் போகின்றனர். இதை பார்த்தாவது திருந்துவீங்களா? இல்ல முடிச்சிக்குவீங்களா? என்று கேட்கின்றனர் ரசிகர்கள். அந்த நேரத்தில ஏதாவது உருப்படியா போட்டு டிஆர்பியை ஏற்றுமா சன்டிவி.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Priyamanaval director has become a psyco since is thought is like a criminal, and atlast they didnt no how to take the story they atlast the end.
Please Wait while comments are loading...