ஐடி சிக்கலில் 4 அமைச்சர்கள்... கிடைக்குமா முன் ஜாமீன்? - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதையடுத்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ், செய்யூர் ராஜூ, மற்றும் தளவாய் சுந்தரம் ஆகியோர் மீது அபிராமபுரம் காவல்நிலையத்தில் வருமான வரித்துறையினர் புகார் அளித்துள்ளனர். அதனால் அவர்கள் கைது செய்யப்படலாம் என்ற நிலையில், அவர்கள் இன்று நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்க உள்ளனர்.

கடந்த 7ஆம் தேதி, அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், முன்னாள் எம்.பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் மற்றும் துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

Whether the Four Admk ministers will get bail or not?

அதனையடுத்து இவர்களிடம் வருமான வரித்துறை அலுவலகத்தில் பல மணிநேரம் விசாரணையும் நடத்தப்பட்டது. இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் பதவியிலிருந்து விலக வேண்டும் என மூத்த அமைச்சர்கள் கோரி வருகின்றனர். இந்தப் பிரச்சனையில் மூத்த அமைச்சர்கள் மற்றும் டிடிவி தினகரன் இடையே மோதல் உருவாகியுள்ளது.

மேலும் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனையில் சிக்கிய ஆவணங்களைக் கொண்டு அமைச்சர்கள் உடுமலை ராதா கிருஷ்ணன், காமராஜ், செய்யூர் ராஜூ மற்றும் தளவாய் சுந்தரம் ஆகியோர் மீது அபிராமபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆகையால் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதால், அவர்கள் இன்று நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோர உள்ளனர். முன் ஜாமீன் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Case filed against Minister Udumalai Radhakirishnan, seyyur Raju, Kamaraj and Thalavai sundram. They may file a petition for anticipatory bail in high court.
Please Wait while comments are loading...