பிக்பாசில் இருந்து விரட்டப்படுகிறாரா நடிகர் ஸ்ரீ? உள்ளுக்குள் ஏகப்பட்ட எதிர்ப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதலில் வெளியேறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நமீதா, ஓவியா, உள்ளிட்ட 15 பேர் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சியை உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கி வருகிறார்.

who will be eliminated first in big boss?

முதல் நாளின் இறுதியாக பிக் பாஸ் ஷோவில் இருந்து வெளியேறப் போவது யார் என்று, அவரவர் விருப்பங்களை தெரிவித்தனர். இதில், முதல் நபர் மற்றும் இரண்டாவது நபரின் பெயரை குழுவில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.

நடிகர் கஞ்சா கருப்பு கூறுகையில், முதல் நபராக நடிகர் ஸ்ரீ வெளியேற வேண்டும் எனக் கூறினார். அடுத்ததாக யார் பெயரை குறிப்பிடுவது என யோசிக்கிறேன் என்றார்.

அதேபோல் குழு தலைவர் சிநேகன் கூறுகையில், ஜூலி, ஸ்ரீ ஆகியோரை வெளியேற்ற வேண்டும் எனக் கூறினார். இதேபோன்று, ஆர்த்தி உள்ளிட்ட பலரும் ஸ்ரீ, அனுயா, ஜூலி ஆகியோரின் பெயரை தெரிவித்தனர். ஏனேனில் நடிகர் ஸ்ரீ விருப்பம் இல்லாமல் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளாதாக கூறப்படுகிறது.

முடிவில் நடிகர் ஸ்ரீ மற்றும் ஜல்லிக்கட்டு புகழ் ஜூலி ஆகிய இருவரை வெளியேற்ற இறுதி செய்யப்பட்டது. எனினும், நாள்தோறும் இந்த கருத்து கேட்கப்பட்டு அதிகமாக நெகடிவ் மதிப்பெண் பெறுபவர் இறுதியில் வெளியேற்றப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரையுமே வெளியேற்றுவதில் குழுவில் உள்ளவர்கள் ஆர்வமாக உள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
who will be eliminated first in big boss house?
Please Wait while comments are loading...