"பை பரணி" என்ற கோஷம்தான் ஜெயிக்கும்... பரணி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் ஜெயிப்பார் என்று கமலின் கேள்விக்கு நடிகை ஓவியாதான் என்று நடிகர் பரணி பதிலளித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் 15 போட்டியாளர்கள் ஒரு வீட்டில்தங்க வைக்கப்பட்டனர். அவர்களில் யார் கடைசி வரை அந்த வீட்டில் தங்குகிறார்களோ அவரே வெற்றி பெறுவார்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ அவராகவே வெளியேறிவிட்டார். அனுயா, கஞ்சா கருப்பு ஆகியோரும் வெளியேற்றப்பட்டனர்.

பரணியை டார்ச்சர் செய்த போட்டியாளர்கள்

பரணியை டார்ச்சர் செய்த போட்டியாளர்கள்

பரணி பிக்பாஸ் வீட்டிலிருந்தால் பெண்களின் பாதுகாப்பு இல்லை என்றும் , அவர் இந்த வீட்டில் இருந்தால் நாங்கள் டாஸ்க் செய்ய மாட்டோம், சாப்பிட மாட்டோம் என்று வீட்டுக்குள்ளேயே மற்ற போட்டியாளர்கள் போர்க் கொடி உயர்த்தினர். இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளானார் பரணி.

தப்பிக்க நினைத்தார்

தப்பிக்க நினைத்தார்

இதனால் அவர் அந்த வீட்டிலிருந்து வெளியேற நினைத்து சுவர் ஏறி குதித்தார். இதைத் தொடர்ந்து பிக்பாஸ் விதிகளை மீறியதாக அவர் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார்.

Anbumani Ramadoss says 'People can put vote for me instead of Oviya'-Oneindia Tamil
ஹீரோவாக மாறிய பரணி

ஹீரோவாக மாறிய பரணி

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வீட்டை விட்டு தப்பிக்க நினைத்தது ஏன் என்று பரணியிடம் கமல் கேட்டார். அதற்கு அவர் பேசுகையில், என்னால் பெண்களின் பாதுகாப்புக்கு ஆபத்து என்கிறார்கள். செருப்பால் அடித்தாலும் பரணி இங்கேயே கிடப்பான் என்று காயத்ரி சொல்கிறார்.

அவ்வளோ கேவலாமா

அவ்வளோ கேவலாமா

நான் என்ன அவ்வளவு கேவலமானவனா. நான் அங்கிருந்த பெண்களை மனதாலும் தவறாக நினைக்க வில்லை. 30 கேமராக்களை பார்த்து எனக்கு பயமில்லை. அதை விட பயமுறுத்தும் நபர்கள் அங்கு உள்ளனர் என்றார்.

ஜூலியை மன்னிக்கிறேன்

ஜூலியை மன்னிக்கிறேன்

அண்ணே அண்ணே என்று அழைத்த ஜூலியுமா உங்களுக்கு ஆதரவு தரவில்லை என்று கமல் கேட்டதற்கு, நம் வீட்டில் தங்கை ஒருவர் திருமணமாகி சென்றால், அங்கு புகுந்த வீட்டில் ஒரு மாதிரியாகதான் நடந்து கொள்வார் என்று அவர் மன்னித்து விடுகிறேன் என்றார்.

பை கோஷம்

பை கோஷம்

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கமலின் கேள்விக்கு, நான் வெளியேறிய போது பை பரணி என்ற ஒரு கோஷம் நிச்சயம் ஜெயிக்கும் என்றார். அது யார் என்றால் ஓவியா. மக்களின் ஆதரவும் ஓவியாவுக்கு தான் உள்ளது. பார்ப்போம் யார் வெல்வார்கள் என்று.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Bharani says Oviya will won the Bigg boss tamil Programme.
Please Wait while comments are loading...