மதுசூதனன் திடுதிப்பென கலகக் குரல் கடிதம் அனுப்பியதன் பரபர பின்னணி இதுதானாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  இன்னுமொரு அதிமுக தர்மயுத்தமா?- வீடியோ

  சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திடீரென முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ்-க்கு மதுசூதனன் கடிதம் அனுப்பியுள்ளது ஏன் என்பதுதான் அதிமுகவின் ஹாட் டாபிக்.

  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கிடைத்த தோல்வியை வடசென்னை சீனியரான மதுசூதனனால் ஏற்க முடியவில்லையாம். அதிமுக அணிகள் இணைப்பினால் ஓபிஎஸ் மட்டுமே அனைத்தையும் அனுபவிக்கிறார் என்பது அவரது ஆதரவாளர்கள் கருத்து.

  ஏமாற்றமே மிச்சம்

  ஏமாற்றமே மிச்சம்

  அவரை நம்பி வந்தவர்களுக்குக்கு மாவட்ட செயலாளர் பதவி கூட கிடைப்பதில்லை என்கிற குமுறலும் உண்டு. கட்சிப் பதவிகளிலும் ஓபிஎஸ் தரப்பினருக்கு உரிய முக்கியத்தும் கொடுக்கப்படுவதில்லையாம்.

  ஆதரவாளரை கொண்டுவர முயற்சி

  ஆதரவாளரை கொண்டுவர முயற்சி

  வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த வெற்றிவேலை, ஆர்.கே.நகர் தேர்தல் தோல்வியைக் காரணமாக முன்வைத்துப் பதவியில் இருந்து தூக்கிவிட்டனர். தற்போது வெற்றிவேல் வகித்த வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு ராஜேஷ் வர வேண்டும் என விரும்பினார் மதுசூதனன்.

  மதுசூதனன் கவலை

  மதுசூதனன் கவலை

  இதைப் பற்றி சில நாட்களுக்கு முன்னர் ஓபிஎஸ் கவனத்துக்குக் கொண்டு சென்றாராம் மதுசூதனன். ஆனால் ஓபிஎஸ்ஸோ, இப்போது யாரையும் நியமிப்பதாக இல்லை எனக் கூறியதும் மிகவும் நொந்து போய்விட்டார் மதுசூதனன்.

  பதவிக்காகவே..

  பதவிக்காகவே..

  வேறவழியே இல்லாமல் சவுண்டு விட்டுப் பார்ப்பது என கோதாவில் குதித்துவிட்டாராம் மதுசூதனன். இப்படி கலகக் குரல் எழுப்பியாவது காரியம் சாதிக்கலாம் என்பதுதான் மதுசூதன் தரப்பின் ஐடியா என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Here the reasons for AIADMK presidium chairman Madhusudhanan's revolt in AIADMK.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  X