ரஜினிகாந்த் கையில் காண்பிக்கும் முத்திரைக்கு என்ன அர்த்தம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஆன்மீகத்திற்கும் அரசியலிற்கும் வேறுபாடு தெரியாதவரா ரஜினிகாந்த் ?- வீடியோ

  சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது கையில் காண்பிக்கும் முத்திரை இப்போது நாடு முழுக்க பேசுபொருளாகியுள்ளது.

  ஆள் காட்டி விரலையும், சுண்டு விரலையும் மட்டும் உயர்த்தி காட்டும் இந்த நடைமுறை, யோகாசனத்தின் அங்கமான, அபனா முத்திராவை போலவே காணப்படுகிறது என்கிறார்கள் அந்த துறை வல்லுநர்கள்.

  இது செரிமானத்திற்கு உதவும் ஒரு முத்திரை என்போரும் உண்டு. மாட்டு கொம்புகளை நினைவுபடுத்துவதை போல காணப்படும் இதுபோன்ற முத்திரை ராக் ஸ்டாரை போல இருந்தது.

  கட்சி சின்னம்?

  கட்சி சின்னம்?

  ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்க உள்ள நிலையில், இதுதான் அந்த கட்சி சின்னமாகவும் மாறப்போவதாக கூறப்படுகிறது. இதற்கானஅர்த்தம் என்ன என்பது தேசிய அளவில் நெட்டிசன்கள் விவாதிக்கும் கருவாக மாறியுள்ளது.

  பஞ்சபூதங்களும் கைகளில் அடக்கம்

  பஞ்சபூதங்களும் கைகளில் அடக்கம்

  குவாராவில் இதுபற்றி ஒருவர் விளக்கியுள்ளதை பாருங்கள்: ஒவ்வொரு விரலும் இயற்கையின் பஞ்ச பூதங்களை குறிக்கும். பெருவிரல் நெருப்பை குறிக்கும், ஆள்காட்டி விரல் காற்றை குறிக்கும், நடு விரல் வெளியை குறிக்கும், மோதிர விரல், பூமியை குறிக்கும். சுண்டு விரல் நீரை குறிக்கும் என கூறியுள்ளார். இப்படி, சுண்டு விரலையும், ஆள்காட்டி விரலையும் மேலே காண்பிப்பதற்கு பெயர் ஹஸ்த முத்திரை என்கிறார் அவர்.

  பாபாவில் முத்திரை

  பாபாவில் முத்திரை

  2002ம் ஆண்டு முதலே இந்த முத்திரை ரஜினி ரசிகர்களுக்கு பரிட்சையமானது. அப்போது வெளியான பாபா திரைப்படத்தில் இந்த முத்திரையை அவர் அறிமுகம் செய்தார். அந்த திரைப்படத்தில் நாத்தீகர் ஒருவர் எப்படி கடவுள் நம்பிக்கைக்குள் வருவார் என்பது காண்பிக்கப்பட்டிருக்கும். ஆன்மீக அரசியல் என்று ரஜினி கூறியதையும் இதையும் கூட பொறுத்தி பார்க்கலாம்.

  சாத்தான் பார்வையிலிருந்து தப்ப

  சாத்தான் பார்வையிலிருந்து தப்ப

  உலகம் முழுக்க இந்த முத்திரை பிரபலமானது டியோ என்ற அமெரிக்க ராக் ஸ்டாரால். அவரின் இத்தாலி பாட்டி இந்த முத்திரையை அறிமுகம் செய்ததாக கூறியிருந்தார். சாத்தான்களின் பார்வையில் இருந்து காப்பாற்றிக்கொள்ள இந்த முத்திரை பயன்படுத்தப்படுவதாக இத்தாலி பாட்டி கூறியிருந்தாராம். இதன்பிறகு ராக் பார்ட்டிகளில் இது ஒரு ஸ்டைலாக பின்பற்றப்பட்டது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Rajinikanth’s index finger and the little finger were upright and the thumb was clasped against the two middle fingers. Rajinikanth instantly turned into a rockstar, doing the all famous ‘hand horn’.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற