For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

7 பவுன் தங்க செயின் பறிப்பு.. திருடியவனை காட்டி கொடுக்க முடியாமல் தவித்த சுதா.. ஏன்?

கழுத்தில் கிடந்த தங்க சங்கிலி பறித்த கணவனை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கொள்ளையனை காட்டிக்கொடுக்கமுடியாமல் தவித்த பெண்

    தஞ்சை: பெண்ணின் கழுத்தில் இருக்கும் தங்க சங்கிலியை ஒருத்தன் பட்டப்பகலில் அதுவும் ஆள் நடமாட்டம் மிகுந்த பஜார் பகுதியில் அறுத்து கொண்டு மின்னல் வேகத்தில் மறைகிறான். ஆனால் அந்த பெண்ணால் திருடன் திருடன் என கத்தி கூப்பாடுகூட போட முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஏன்? படியுங்கள்.

    ஒரத்தநாடு அருகே காவராபட்டு பகுதியை சேர்ந்தவர் சிவாமணி. 35 வயதிருக்கும். இவருக்கும் ஒக்கநாடு மேலையூர் பகுதியை சுதா என்ற பெண்ணுக்கும் கடந்த 2009-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. 2 குழந்தைகளும் உள்ளனர்.

    Wife claimed the husband was walking to the 7 sovereign gold

    திருமணம் ஆனது முதலே இவருக்கு தன் மனைவி மீது சந்தேகம்.. சந்தேகம்.. நித்தமும் சண்டையும், தகராறுமாய் நாட்கள் பறந்தன. பொறுத்து பொறுத்து பார்த்த சுதா, இனி கணவரை திருத்த முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டார். எனவே தானாக திருந்தி வரட்டும் என்று நினைத்து தன் தந்தையின் வீட்டுக்கு போய் அங்கேயேதான் வசித்து வருகிறார்.

    இந்நிலையில், நேற்று ஒரத்தநாடு மார்க்கட்டில் சில பொருட்களை வாங்கி கொண்டு சுதா சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் தனது கணவர் வந்து கொண்டிருப்பதை கண்டு ஒரு கணம் திகைத்து நின்றார். பைக்கில் வந்த கணவனோ சுதாவின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு பைக்கில் மின்னல் வேகத்தில் மறைந்தார்.

    சுதாவுக்கு ஒருபக்கம் அதிர்ச்சி... மற்றொரு பக்கம் வேதனை.. திருடன் திருடன் என கத்தவும் முடியாத நிலை. நகையை பறித்து கொண்டு போனது புருஷனாயிற்றே. கத்தி கூப்பாடு போட்டால் கூட்டம் அதிகமுள்ள இடம் என்பதால் கண்டிப்பாக தர்மஅடிதான் கிடைக்கும் என்று தெரியும். அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்து நின்றார் சுதா. பின்னர் இந்த சம்பவம் குறித்து பட்டுக்கோட்டை மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டு, தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

    English summary
    Wife claimed the husband was walking to the 7 sovereign gold
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X