ஒரே நேரத்தில் எம்.பி., எம்.எல்.ஏ. பதவிக்கு ரஜினி போட்டியிட வாய்ப்பு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபாவுக்கு தேர்தல் வரும்போது அத்தோடு சேர்த்து தமிழக சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படக் கூடும் என்று நம்பப்படுவதால், ஆன்மீக அரசியல் தலைவராக அவதாரம் எடுத்துள்ள ரஜினிகாந்த், இரு தேர்தல்களிலும் போட்டியிடும் வாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளன.

லோக்சா தேர்தல் 2019ம் ஆண்டு நடத்தப்படும். தமிழக சட்டசபையின் ஆயுள் காலம் 2021ல் முடிவடையவுள்ளது. இருப்பினும் தற்போது தமிழகத்தில் உருப்படியான அரசியல் தலைவர்கள் இல்லாத காரணத்தாலும், உப்புக்குச் சப்பு அரசு பதவியில் உள்ளதாலும், அதற்கு முன்பாகவே ஆட்சி கவிழும் அல்லது கவிழ்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி நடக்கும்பட்சத்தில் சட்டசபைக்கும் சேர்த்தே தேர்தல் நடத்தப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. அதற்குள் ரஜினி ரெடியாகி விடுவார் என்றே தெரிகிறது. அப்படி நடந்தால், அவர் இரு தேர்தல்களிலும் போட்டியிடலாம்.

பொங்கலன்று புதுக் கட்சி

பொங்கலன்று புதுக் கட்சி

ரஜினிகாந்த்தைப் பொறுத்தவரை தேர்தல் வரும்போதுதான் கட்சி என்று கூறியுள்ளார். அதேசமயம், தனது கட்சியின் பெயரை பொங்கலுக்கு அவர் அறிவிக்கலாம் என்று அவரது அண்ணன் சத்தியநாராயண ராவ் பெங்களூரிலிருந்து தகவல் கொடுத்துள்ளார்.

ரஜினிக்கு வேலை நிறைய இருக்கு

ரஜினிக்கு வேலை நிறைய இருக்கு

புதுக் கட்சி தொடங்கி, அதற்கான கொள்கைகளை வகுத்து, கட்சிக்கு நிர்வாகிகளை நியமித்து, மாவட்ட வாரியாக, பகுதி வாரியாக, தொகுதி வாரியாக நிர்வாகிகளை அறிவித்து, எல்லாவற்றையும் செய்து முடித்து மக்களை சந்திக்க கிளம்பும் வரை நிறைய வேலைகள் ரஜினிக்கு உள்ளன.

ரஜினிக்கு சாதகமாக தேர்தல்கள்

ரஜினிக்கு சாதகமாக தேர்தல்கள்

ரஜினிக்கு அதிக சிரமம் கொடுக்காத வகையில் தேர்தல்களை நடத்த டெல்லி உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது சட்டசபைத் தேர்தலுக்காக 2021 வரை காத்திருக்காமல், 2019 லோக்சபா தேர்தலின்போதே சட்டசபைத் தேர்தலையும் நடத்த முனையலாம் டெல்லி. எனவே இரு தேர்தல்களிலும் ரஜினி போட்டியிடும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே நேரத்தில் இரு பதவி

ஒரே நேரத்தில் இரு பதவி

அப்படி நடக்கும் பட்சத்தில் ரஜினிகாந்தும் அவரது ஆதரவாளர்களும் இரு தேர்தல்களிலும் போட்டியிடலாம். ரஜினி எம்.பி., எம்.எல்.ஏ என இரு பதவிகளுக்கும் போட்டியிடலாம் என்று தெரிகிறது. அப்படி நடக்கும் பட்சத்தில் அவர் எந்தப் பதவியை இறுதியாக தேர்வு செய்வார் என்பதும் எதிர்பார்ப்புக்குரியது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Rajinikanth can get a chance to contest in both MP and MLA elections, if the TN assembly polls are preponed to 2019.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற