For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தலில், பாஜகவுடன் அதிமுக கூட்டணியா? அமைச்சர் ஜெயக்குமார் பதில்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜகவுடன் அதிமுக கூட்டணியா? ஜெயக்குமார் விளக்கம்- வீடியோ

    சென்னை: லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா என்பது குறித்து, அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.

    சென்னையில் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் அவர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்கள்:

    Will the AIADMK make an alliance with BJP? Minister Jayakumar gives answer

    இன்னும், நாலைந்து மணி நேரத்தில் லோக்ஆயுக்தா மசோதா எப்படி இருக்கும் என்பது தமிழக மக்களுக்கு தெரியும். பாஜகவிற்கு சில அஜென்டா வைத்திருப்பார்கள். அது அந்த கட்சி அதிகாரத்திற்கு உட்பட்டது. அதில் நான் கருத்து கூற முடியாது. பொதுவாக ஒரு கட்சி தலைவர் என்பவர் தங்கள் கட்சியை வலுப்படுத்த ஒவ்வொரு மாநிலத்திற்கும் செல்வது வழக்கம். அமித்ஷாவும் அப்படிதான் தமிழகம் வருகிறார் என்றார்.

    பாஜக-அதிமுக கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளாரே என்ற நிருபர்கள் கேள்விக்கு, ஜெயக்குமார் அளித்த பதில்: கூட்டணி யாருடன் யார் என்பதெலெ்லாம், தேர்தல் நேரத்தில் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு போன்ற அதிகாரப்பூர்வ அமைப்புகள்தான் முடிவு செய்யும்.

    அவர் ஏன் அவசரப்பட்டு சொல்கிறார் என்று தெரியவில்லை. 1967லேயே காங்கிரசுக்கு தமிழகத்தில் சமாதி கட்டியாகிவிட்டது. இனி காங்கிரசுக்கு தமிழகத்தில் வாழ்வு இல்லை. இப்போது தேவையில்லாமல் அனுமான அடிப்படையில் கருத்து கூறுவதை ஏற்க முடியாது.

    ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு 5 வருட அவகாசம் தர வேண்டும். இன்னும் 3 வருடம் அவகாசம், இருக்கும் நிலையில், இப்போது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த கூடாது என்பதே அதிமுக வாதம். இதைத்தான் சட்ட ஆணைத்தில் எடுத்து வைத்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    English summary
    Will the AIADMK make an alliance with BJP in the upcoming Loksabha election? here is the answer from TN minister Jayakumar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X