For Daily Alerts
புதுச்சேரியில் பயங்கரம்: செங்கலால் அடித்து வாலிபர் படுகொலை.. மர்மநபர்களுக்கு வலை

செங்கலால் அடித்து வாலிபர் படுகொலை புதுச்சேரியில் பயங்கரம்- வீடியோ
புதுச்சேரி: புதுச்சேரியில் வாலிபர் ஒருவரை மர்மநபர்கள் சிலர், செங்கல்லால் அடித்து படுகொலை செய்துள்ளனர்.
புதுச்சேரியில் இளைஞர் ஒருவரை மர்மநபர்கள் சிலர், செங்கலை கொண்டு கடுமையாக தாக்கிபடுகொலை செய்துள்ளனர். மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடை முன்பு மர்ம நபர்கள் அரங்கேற்றிய இவ்வெறிச்செயல் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தகவல் அறிந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டதுடன்,கொலை நடந்த பகுதியில் இருந்த செங்கலை கைப்பற்றி கைரேகை நிபுணர்களுடன் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர் . அந்த இளைஞர் நெசவாளர்கள் நகரை சேர்ந்த வேலாயுதம் என்பவரது மகன் ரவி என்று விசாரணையில் தெரியவந்தது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!