கஜா: மத்திய ஆய்வு குழுவிற்கு எதிர்ப்பு.. தஞ்சையில் மக்கள் பெருந்திரளாக போராட்டம்
தஞ்சையில் கஜா புயல் பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்து வரும் மத்திய குழுவிற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
தஞ்சாவூர்: தஞ்சையில் கஜா புயல் பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்து வரும் மத்திய குழுவிற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
கஜா புயலால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். கஜா புயல் பல லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. 10 மாவட்டத்தில் மக்கள் மொத்தமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

[கஜா பாதிப்பு அதிகமாக உள்ளது.. சேத மதிப்பீட்டை உடனே கணக்கிட முடியாது.. மத்திய குழு தகவல்! ]
இதையடுத்து மத்திய அரசின் ஆய்வு குழு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து வருகிறது. நேற்று புதுக்கோட்டையில் மத்திய குழு ஆய்வு செய்தது.
இந்த நிலையில் கஜா புயல் தொடர்பாக தொடர்ந்து மத்திய குழு இன்றும் ஆய்வு செய்து வருகிறது. இன்று தஞ்சாவூர், திருவாரூரில் மத்திய குழு ஆய்வு செய்ய தொடங்கி உள்ளது.
ஆனால் தஞ்சாவூரில் மத்திய குழுவிற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ஒரத்தநாட்டில் மத்திய குழு அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
டேனியல் ரிச்சர்ட் தலைமையில் 7 பேர் குழுவினர் ஆய்வு மேற்கொள்கின்றனர். இந்த குழு ஊருக்குள் வரக்கூடாது என்று மக்கள் போராடி வருகிறார்கள்.
மத்திய அரசும் மாநில அரசும் தங்களுக்கு நிவாரண நிதி வழங்கவில்லை.மக்களை அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் வந்து பார்க்கவில்லை என்று கூறி மக்கள் போராடி வருகிறார்கள்.
புயல் பாதித்து 9 நாட்கள் ஆகியும் இன்னும் டெல்டாவில் பல இடங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. பல இடங்களில் இன்னும் தண்ணீர் வரவில்லை, மின்சாரம் வரவில்லை. இதனால் மக்கள் அரசு நிர்வாகம் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
-
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்!












Click it and Unblock the Notifications