ஜெயலலிதா மறைவுக்கு பின் என்னை கட்டாயப்படுத்தி முதல்வர் ஆக்கினார்கள்.. ஓபிஎஸ் பரபர பேட்டி
தேனி: நான் எந்த துரோகமும் செய்யவில்லை என முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கூறியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின் என்னை கட்டாயப்படுத்தி முதல்வர் ஆக்கினார்கள். மேலும் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைத்து ஆட்சி அமைத்தவர் ஜெயலலிதா.. ஒன்றிணைந்தால் தான் வெற்றி பெற முடியும் என்று சொன்னது தவறா? என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக மறுபக்கம் கூட்டணி தொகுதி பங்கிடு பேச்சுவார்த்தையினை தொடங்கியுள்ளது. மறுபுறம் அதிமுக பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைக்க போராடி வருகிறார்கள். சசிகலா மற்றும் ஓபிஎஸை பாஜக கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சி செய்கிறது. ஆனால் ஓ பன்னீர் செல்வத்தை அதிமுகவில் சேர்க்க எடப்பாடி திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

தேனியில் ஓ பன்னீர் செல்வம் பேட்டி
இதனால் ஓபிஎஸ் எந்த பக்கம் செல்லலாம் என முடிவு எடுக்காமல் இருந்து வந்தார். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறி வந்த முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தற்போது திமுகவில் இணையப் போவதாக தகவல்கள் பரவின. ஆனால் இப்போது வரை ஓ பன்னீர் செல்வம் எந்த கட்சியிலும் சேரவில்லை. இந்த நிலையில் தான் இன்று தேனியில் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
அதிமுகவில் இரட்டை தலைமையை கொண்டு வந்ததே எடப்பாடி பழனிசாமி தான். எடப்பாடி பழனிசாமிக்கு நான் நான்கரை ஆண்டுகளும் முழு ஒத்துழைப்பினை கொடுத்தேன். என்னை ஒருங்கிணைப்பாளராக பதவி ஏற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதே எடப்பாடி தான். இருவரும் இணைந்தே கையெழுத்திட்டு முடிவுகளை எடுக்க முடியும் என மாற்றம் கொண்டு வந்ததும் எடப்பாடி தான்..
மோடி கூறியதால் தான்
மோடி கூறியதால் தான், நான் அப்போது துணை முதல்வர் பதவியினை ஏற்றுக்கொண்டேன். ஜெயலலிதா பிரிந்து சென்றவர்களை எல்லாம் கட்சியில் இணைத்து வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். ஆனால் எடப்பாடி தலைமையேற்ற பிறகு எத்தனை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று இருக்கிறது.
தற்போது பழனிசாமி தலைமையிலான அதிமுக கடும் வீழ்ச்சியினை கண்டு வருகிறது. நான் ஒருபோதும் கட்சிக்கு துரோகம் செய்ததில்லை. ஜெயலலிதா சிறை சென்றபோது என்னை தான் முதல்வராக தேர்ந்தெடுத்தார். ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வர் பதவியை ஏற்க மறுத்தேன். எனினும் என்னை கட்டாயப்படுத்தி 3 வது முறையாக முதல்வர் பதவியை ஏற்க வைத்தனர்.
என்னை அவமரியாதை செய்தார்கள்
நான் ராமநாதபுரத்தில் போட்டியிட என்.டி.ஏ வற்புறுத்தியதால் தான் போட்டியிட்டேன். அப்போதும் கூட என் தொகுதியில் எத்தனை பன்னீர் செல்வம் போட்டியிட்டார்கள் என்று. அங்கு ஓ பன்னீர் செல்வம் என்ற பெயரில் எத்தனை வேட்பாளர்களை நிறுத்தினார் என்பது எல்லாருக்கும் தெரிந்தது தான்.
துணை முதல்வர் பதவியே வேண்டாம் என்றுதான் சொன்னேன். பிரதமர் மோடி சொன்னதன் அடிப்படையில் நான் ஏற்றுக்கொண்டேன். அதற்கு உரிய மரியாதை இல்லை.. அதனையும் பொறுத்துக்கொண்டேன். என்னென அவமரியாதை செய்தார்களே அதையெல்லாம் பொறுத்துக்கொண்டுதான். இயக்கத்திற்காக பணியாற்றினேன்.
எம்ஜிஆர் எழுதி வைத்த விதி
எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்பதற்காக அப்படி இருந்தேன். கடைசியில் கட்சியின் சட்ட விதிகளை மாற்றினார்கள். எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சட்ட விதிகளை மாற்றுவதற்கு யாருக்கு உரிமை உள்ளது. எந்த விதியை வேண்டுமானாலும் திருத்தலாம்.. ஆனால், பொதுச்செயலாளரை கழகத்தின் அடிப்படை தொண்டர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும் என்ற விதியை மட்டும் திருத்த முடியாது என்பதையும் மாற்றினார்கள்.
கட்சியை உருவாக்கிய எம்.ஜிஆர் எழுதி வைத்த விதியை மாற்றுவதற்கு நீங்கள் யார்? சட்ட போராட்டம் நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. எனக்கென்று ஒரு நிலைப்பாட்டை நான் அரசியலில் எடுக்க வேண்டுமா? வேண்டாமா? கட்சியை யாராலும் வெல்ல முடியாத நிலைக்கு கொண்டு சென்ற ஜெயலலிதாவுக்கு பங்கம் விளைவிக்கிறீர்கள். இந்த இயக்கத்திற்கு எவ்வளவு சோதனை வந்தாலும் தாங்கி கொண்டு பொறுமையாக இருந்த பன்னீர் செல்வத்தை அரசியலில் இருந்தே துறவறம் போக செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கிறீர்கள்.
அரசியலில் இருந்தே விலகுகிறேன்
கட்சி வேஷ்டி கட்டக்கூடாது. கொடி கட்டக்கூடாது என்று நீதிமன்றத்திற்கு செல்கிறீர்கள். இதெல்லாம் யார் செய்வார்கள்.. முன்னாள் முதல்வராக இருந்துள்ளேன். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்துள்ளேன். நான் என்ன தவறு செய்தேன் என்று மட்டும் கேட்கிறேன். அதை மட்டும் சொல்லுங்க.. நான் அரசியலில் இருந்து விலகிக்கொள்கிறேன்" இவ்வாறு அவர் பேசினார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications