முல்லை பெரியாறு அணை.. 137.50 அடியை எட்டிய நீர்மட்டம்.. கேரளாவிற்கு நீர் திறப்பு!
தேனி: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.50 அடியை எட்டிய நிலையில், கேரளாவிற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக முல்லைப் பெரியாறு அணை திகழ்ந்து வருகிறது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

முல்லை பெரியாறு
இதனால் நாளுக்கு நாள் நீர்மட்டம் உயர்த்து வந்த நிலையில், நேற்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 135.70 அடி ஆகவும், நீர் வரத்து 6143 கன அடி ஆகவும் இருந்தது. இந்த நிலையில் தொடர் மழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.50 அடியை எட்டியுள்ளது. அதேபோல் முல்லைப் பெரியாற்றில் ஆகஸ்ட் 10 வரை அணை நீர்மட்டம் 137.50 அடியாக நிலை நிறுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

136 அடி
உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப்பின், முல்லைப் பெரியாறு அணை 7வது முறையாக 136 அடியை கடந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று காலை விநாடிக்கு 2,831 கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலை 6 மணி அளவில் 6,143 கனஅடியாக அதிகரித்தது. இதனால், நீர்மட்டம் 135.80 அடியானது. நேற்றிரவு இரவு 7 மணியளவில் நீர்மட்டம் 136 அடியை கடந்தது.

7வது முறை
2014ல் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்பு, 2014, 2015, 2018, 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளை தொடர்ந்து தற்போது 7வது முறையாக நீர்மட்டம் 136 அடியை கடந்துள்ளது. இதனால் இதனால் இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழ்நாடு பொதுப்பணித்துறை முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்தது.

நீர் திறப்பு
இதனிடையே முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பினார். இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு 3 ஷட்டர் வழியாக 534 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 137.50 அடியை எட்டிய நிலையில், கேரளப் பகுதியில் உள்ள ஷட்டர் வழியாக நீர் திறக்கப்பட்டுள்ளது.
-
கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா.. தமிழ்நாட்டுக்குள் ஜாலியாக உலா வரும் வாகனங்கள்! கலக்கத்தில் கன்னியாகுமரி -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications