கிளம்புங்க..நாங்களே பாத்துக்குறோம்! ஓபிஎஸ் டீமில் வெடித்த குரல்! எடப்பாடி கூட இருக்கும் ’எட்டப்பன்’!
தேனி : அதிமுக கட்சி அழிவு பாதைக்கு செல்கிறது என்றால் அதற்கு எடப்பாடியுடன் உள்ள எட்டப்பன் கே. பி. முனுசாமி தான் காரணம் எனவும், வாய் தான் அவருக்கு மூலதனம் என அதிமுகவில் ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
Recommended Video
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் உள்ள அக்ரஹாரம் தெருவில் இருக்கும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரது துணைவியார் விஜயலட்சுமியின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்வுகளில் தேனி மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான ஆதரவாளர்கள் தேனி வந்து ஓ.பன்னீர்செல்வத்தின் துணையாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில்," எந்த அணியில் இருந்தாலும் ஓ.பி.எஸ் விஸ்வாசமாக இருந்தவர். சசிகலா காலை பிடித்து முதலமைச்சராக பதவி ஏற்க வேண்டும் என்று கூறியவர் ஆர்.பி.உதயகுமார். தீர்ப்பு சாதகமாக வந்ததும் இவ்வாறு பேசி வருகின்றனர்.

கே.பி.முனுசாமி எட்டப்பன்
தென் மாவட்டங்களில் ஓ.பி.எஸ் பிரச்சாரம் செய்யவில்லை எனக் கூறுவது தவறு. தர்மயுத்த காலத்தில் ஓ.பி.எஸ் செல்வாக்கு அதிகமாக இருந்ததால் ஓரங்கப்பட்டார். ஓ.பி.எஸ் உடன் இருந்த கே.பி.முனுசாமி ஒரு எட்டப்பன். வாய் தான் அவருக்கு மூலதனம். அவர் ஏதேனும் கூறி குழப்பி கட்சியை அழிக்க பார்க்கிறார். அவர் நேருக்கு நேர் பேச தயாரா?

நிகழ்கால பரதன்
ஜெயலலிதா இருந்த போது ஓபிஎஸ் அவர்களை நிகழ்கால பரதன் என்று குறிப்பிட்டுள்ளார். உதயகுமார் நேரத்திற்கு தகுந்தாற்போல் தன்னை மாற்றிக் கொண்டு பேசி வருகிறார். ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திய போது, அவருக்கு 45 சதவீதம் பேர் ஆதரவாக இருந்ததால் அவரை நயவஞ்சமாக கூட்டு சேர்த்து எடப்பாடி முதலமைச்சராகி விட்டார். அவர் திருந்த வேண்டும் இனியும் திருந்தாவிட்டால் ஒன்றரை கோடி தொண்டர்கள் சேர்த்து திருத்துவோம்.

ஒதுங்கி விடுங்கள்
எடப்பாடி உட்பட அனைவரும் ஒதுங்கி விடுங்கள். ஓபிஎஸ் தலைமையில் கட்சியை நாங்கள் நன்றாக வழி நடத்துகிறோம். தற்போதைய நீதிமன்ற தீர்ப்பு ஒன்றரை கோடி தொண்டர்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்லாமல் ஆறு கோடி மக்களின் எதிர்பார்ப்பாகவும் இருந்தது. எனவே ஓபிஎஸ் அவர்கள் நடந்தவற்றை மறந்து விட்டு அனைவரும் ஒன்றாக இருந்து கட்சியை நன்றாக வழி நடத்தி எதிர்க்கட்சிகளுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும்." என கூறினார்.












Click it and Unblock the Notifications