எதே ஓபிஎஸ் வீட்டை சூறையாடுவீங்களா? முடிஞ்சா தொட்டு பாருங்க ஆர்.பி! சவால் விட்ட சையது கான்! பரபர தேனி
தேனி : கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனியில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஓபிஎஸ் -ன் வீட்டை சூறையாடுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசமாக பேசிய நிலையில், ஆர்பி உதயகுமார் உண்மையான ஆண்மகனாக இருந்தால் ஓபிஎஸ்-ன் வீட்டை தொட்டுப் பார்த்துவிட்டு தேனி மாவட்டத்தை விட்டு வெளியே செல்ல முடியுமா என தேனி மாவட்ட அதிமுக செயலாளரும் ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளருமான சையது கான் பதிலடி கொடுத்துள்ளார்.
மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட திமுக அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து 25ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்
அதன்படி அதிமுக சார்பில் மதுரை, திண்டுக்கல், விழுப்புரம், கோவை, நாமக்கல் உள்ளிட்ட அதிமுக அமைப்பு மாவட்டங்களில் 25ஆம் தேதியும், சென்னை தவிர, ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் உள்ள 6 மாவட்டங்களில் 26ஆம் தேதியும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதிமுக ஆர்ப்பாட்டம்
குறிப்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் பிரம்மாண்டமாக ஆர்ப்பாட்டம் நடத்தி தனது செல்வாக்கினை நிரூபிக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி விரும்பியதால் இதற்காக ஆர்.பி.உதயகுமார் களம் இறக்கப்பட்டார். இதற்காக பல லட்சம் ரூபாய் செலவிடப்பட்ட நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து கட்சித் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் அழைத்து வரப்பட்டுள்ளனர். குறிப்பாக மதுரை திண்டுக்கல் ராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்டு மாஸ் காட்டினார் உதயகுமார்.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்ப்பாட்டத்தில் திமுவை விட ஓபிஎஸ்ஸை விமர்சிப்பதிலேயே ஆர்வம் காட்டினார் ஆர்.பி.உதயகுமார். மேலும் ஆர்ப்பாட்டத்தில் பேசுகையில்,"முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுயிக்கை தெய்வமாக வழிபடுபவர்கள் தேனி மாவட்ட மக்கள். அப்படி விஸ்வாசமான மக்கள் உள்ள தேனி மாவட்டத்தில் ஓ.பி.எஸ் போன்ற துரோகிகள் இருப்பது வருத்தமளிக்கிறது. ரவீந்திரநாத்-திற்கு மக்கள் செல்வாக்கு இருந்தால் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறட்டும். நான் அரசியலில் இருந்தே விலகி விடுகிறேன்

ஓபிஎஸ் வீட்டை சூறையாட..
தற்போது கட்சியில் உள்ள நிர்வாகிகளை நீக்கி வருவதை பார்த்தால் இறுதியில் ஓ.பி.எஸ் மற்றும் அவருடன் இருக்கும் சில பேர் மட்டுமே எஞ்சியிருப்பர். அதிமுக தலைமை கழக அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் கண்ணில் ரத்தம் வர வைக்கிறது. உங்கள் வீட்டை சூறையாட எவ்வளவு நேரமாகும் எனத் தெரியவில்லை." எனப் பேசினார். இது தேனி மாவட்டத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடுமையாக எதிர்வினை ஆற்றி வருகின்றனர்.
Recommended Video

சையது கான் பதிலடி
இந்நிலையில் ஆர்பி உதயகுமார் உண்மையான ஆண்மகனாக இருந்தால் ஓபிஎஸ்-ன் வீட்டை தொட்டுப் பார்த்துவிட்டு தேனி மாவட்டத்தை விட்டு வெளியே செல்ல முடியுமா என தேனி மாவட்ட அதிமுக செயலாளரும் ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளருமான சையது கான் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்," எம்பி ரவீந்திரநாத் செல்வாக்கு இல்லை என்று சொல்கிறார்கள். முதலில் அவர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெறட்டும். அப்போது நாங்கள் இந்த சவாலை ஏற்றுக் கொள்கிறோம். அதுபோல், ஆர்.பி.உதயகுமார் தைரியமான ஆண்மகனாக இருந்தால் ஓபிஎஸ்-ன் வீட்டை தொட்டுப் பார்த்துவிட்டு தேனி மாவட்டத்தை விட்டு செல்லட்டும்" என கடுமையாகப் பேசியிருக்கிறார்
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications