தேனி மாவட்ட திமுகவுக்கு புது உற்சாகத்தை கொடுத்திருக்கும் 'தங்கத்தின்' வருகை

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சென்னை: ஸ்டாலின் மட்டுமே தமிழகத்துக்கு நல்லது செய்யவார்..! திமுகவில் சேர்ந்ததும் ஸ்டாலினுக்கு ஐஸ் வைத்த தங்க தமிழ்செல்வன்...

    சென்னை: அமமுகவில் இருந்து விலகி திமுகவில் தங்கம் தமிழ்ச்செல்வன் இணைந்திருப்பதன் மூலம் தேனி மாவட்ட திமுக உற்சாகமடைந்திருக்கிறது.

    தேனி மாவட்டத்தைப் பொறுத்தவரை அறியப்பட்ட முகங்களாக கம்பம் செல்வேந்திரன், கம்பம் ராமகிருஷ்ணன் இருந்து வருகின்றனர். தேனி மாவட்ட செயலாளராக இருந்த மூக்கையா 2016 தேர்தல் முடிவுகளுக்குப் பின் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

    தேனி மாவட்ட பொறுப்பாளராக ஜெயக்குமார் நியமிக்கப்பட்டார். ஆனால் ஜெயக்குமாரும் திமுகவை வளர்த்தெடுத்ததாக தெரியவில்லை. அவருக்கு மூக்கையா மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன் ஒத்துழைக்கவில்லை என ஜெயக்குமார் தரப்பு கூறியது.

    ஆனால் ஜெயக்குமார் தனி கோஷ்டியை உருவாக்கிக் கொண்டு செயல்படுவதாகவும் புகார் கூறப்பட்டது. ஆக தேனி திமுகவில் மொத்தம் ஐந்து கோஷ்டிகள் வலம் வந்தன.

    தங்கத்தின் வருகையால் உற்சாகம்

    தங்கத்தின் வருகையால் உற்சாகம்

    இதனால்தான் ஒவ்வொரு தேர்தலிலும் திமுக பலத்த அடி வாங்கி வந்தது. தற்போது தங்கம் தமிழ்ச்செல்வனின் வருகையால் தேனி திமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

    ஒதுங்கும் நிலை உருவாகும்

    ஒதுங்கும் நிலை உருவாகும்

    மக்களோடும் தொண்டர்களோடும் நெருக்கமாக இருக்கக் கூடிய தங்க தமிழ்ச்செல்வனுக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி கொடுத்தால் நிச்சயம் சிறப்பாக செயல்படுவார்; கோஷ்டிகளில் குளிர்காய நினைத்தவர்கள் ஒதுங்க வேண்டிய சூழல் வரும் என்பது திமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பு.

    கரூரிலும் இதேதான்

    கரூரிலும் இதேதான்

    ஏற்கனவே கரூர் மாவட்டத்தில் இதே நிலைமைதான் திமுகவுக்கு இருந்தது. அம்மாவட்டத்தில் நன்னியூர் ராஜேந்திரனை பொறுப்பாளராக நியமித்தும் திமுகவின் பணிகள் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.

    வெற்றியை தந்த செந்தில் பாலாஜி

    வெற்றியை தந்த செந்தில் பாலாஜி

    அந்த நிலையில் செந்தில் பாலாஜி திமுகவில் ஐக்கியமாக, அவருக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. தமக்கு வழங்கப்பட்ட பணியை தேர்தல் வெற்றிகள் மூலம் சிறப்பாக சாதித்து காட்டினார் செந்தில் பாலாஜி.

    தங்க தமிழ்ச்செல்வன் மீது எதிர்பார்ப்பு

    தங்க தமிழ்ச்செல்வன் மீது எதிர்பார்ப்பு

    தற்போது அதே பாணியில் தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாய்ப்பு அளித்தால் முழு வீச்சோடு தமது பலத்தை காட்டுவார் என நம்புகின்றனர் திமுகவினர். ஏனெனில் தேனியில் ஓபிஎஸ்-க்கு எதிராக இனி தீவிர களப்பணியாற்ற வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார் தங்கம். அதனால் அவரது செயல்பாடுகள் படுவேகமாக இருக்கும் என்பதால்தான் உற்சாகத்தில் இருக்கிறோம் என்கின்றனர் தேனி திமுகவினர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+