நம்பிக்கை துரோகம் செய்தவர்களுக்கு.. ஒருநாளும் மன்னிப்பு கிடையாது.. டிடிவி தினகரன் பேச்சு!
தேனி: துரோகிகளோடு ஒருநாளும் சமரசம் செய்துகொள்ள மாட்டேன் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், அண்மைக் காலமாக டிடிவி தினகரனின் செயல்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. செயல் வீரர்கள் கூட்டம், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் என்று ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதேபோல் ஒவ்வொரு கூட்டத்திலும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களையும், ஓபிஎஸ் மீது அனுதாபத்தையும் வெளிகாட்டு வருகிறார்.

இந்த நிலையில் தேனியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வந்தார். அவர் கணவாய் மலைப்பகுதியில் வந்தபோது, ஓபிஎஸ் ஆதரவு மாவட்டச் செயலாளரான சையதுகான் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் வரவேற்றனர்.
இதனைத்தொடர்ந்து அமமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் டிடிவி தினகரன் பேசுகையில், கடந்த வாரமே செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட இருந்தன. ஆனால் சிறிய உடல்நிலை பிரச்னை காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. நம்மால் பணம் பெற்றவர்கள் பலர். இன்று எங்கெங்கோ சென்று, ஏதேதோ போராட்டங்களை செய்து வருகிறார்கள். சிலர் சட்டப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் திமுகவில் தஞ்சமடைந்துள்ளனர் என்று ஒபிஎஸ் மற்றும் தங்க.தமிழ்ச்செல்வன் ஆகியோர் மறைமுகமாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து, அமமுக நிர்வாகிகளின் எழுச்சியை இங்கே காண முடிகிறது. பல சோதனைகளுக்கு பிறகும் என்னுடன் நிற்கிறீர்கள். அதிமுக சின்னம், கொடி இருப்பதால் ஏராளமான தொண்டர்கள் அமமுகவில் இணைய முடியாமல் தவித்தனர். ஆனால் இப்போது சூழல் மாறியுள்ளது.
துரோகிகளோடு எப்போது சமரசம் செய்துகொள்ள மாட்டேன். திருடர்கள், பொய் கூறுபவர்களுக்கு மன்னிப்பு உண்டு. ஆனால் நம்பிக்கை துரோகம் செய்தவர்களுக்கு எப்போதும் மன்னிப்பு கிடையாது. வெகு விரைவில் அவர்களுக்கு தண்டனை கிடைக்கும். அதனை நோக்கி தான் அவர்களின் பயணம் இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தார்.
மேலும் ஓபிஎஸ் ஆதரவாளரான சையது கான், டிடிவி தினகரனை சந்தித்துள்ளதால், விரைவில் ஓபிஎஸ் - டிடிவி தினகரன் சந்திப்பு நடக்கலாம் என்று கூறப்படுகிறது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்!












Click it and Unblock the Notifications