திருச்செந்தூர், ராமேஸ்வரம் கடற்கரைக்கு செல்ல 3 நாட்களுக்குத் தடை - சாமி தரிசனம் செய்ய அனுமதி
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, குலசேகரன்பட்டினம், மணப்பாடு, வேம்பார் உள்ளிட்ட அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும் பொதுமக்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர்: ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு இன்றும் நாளையும் தமிழகத்தில் உள்ள முக்கிய கடற்கரைகளில் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும் பொதுமக்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடற்கரைக்கும் செல்ல பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா மற்றும் ஓமிக்ரான் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடற்கரை மற்றும் சுற்றுலா தலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, குலசேகரன்பட்டினம், மணப்பாடு, வேம்பார் உள்ளிட்ட அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும் பொதுமக்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பாபநாசம்
முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட களக்காடு தலையணையில் புத்தாண்டு நாளில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடைவிதித்துள்ளது. திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல நாளை ஒரு நாள் மட்டும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளிலும் குளிக்கவும், அங்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றாலம்
குற்றாலத்தில் உள்ள மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளில் இன்று முதல் நாளை மறுநாள் வரை குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதால் இன்று யாரும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் குற்றாலம் அருவிகளில் குளிக்க வந்த குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

ராமேஸ்வரம்
2022ஆம் ஆண்டு புது வருடம் பிறப்பதை ஒட்டி ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிகளுக்கு பக்தர்களும், சுற்றுலாபயணிகளும் அதிக அளவில் வருகை தருவார்கள். இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் -தமிழக அரசு உத்தரவின்படி காசிக்கு நிகராக புனிதமாக கருதப்படும் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தனுஷ்கோடி
இதேபோன்று உலகப் புகழ்பெற்ற தனுஷ்கோடி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் தடை விதித்து உத்தரவிட்டார். தனுஷ்கோடி பகுதிக்கு இன்று முதல் வாகனங்கள் செல்லவும், சுற்றுலா பயணிகள்-பக்தர்கள் செல்லவும் போலீசார் புதுரோடு பகுதியில் பேரிகாடு அமைத்து அவர்களை திருப்பி அனுப்பினர். கடலில் நீராட மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications