‛‛பயமே இல்லை’’.. நெல்லை மழை வெள்ளத்தில் நீச்சலடித்து பெண்கள், சிறுவர்கள் உற்சாகம்! வீடியோ பாருங்க
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் பல இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தான் பயம் இன்றி மழை வெள்ளத்தில் பெண்கள், சிறுவர்கள் உற்சாகமாக நீச்சலடித்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
வடகிழக்கு பருவமழையின் ஒருபகுதியாக மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 3 மற்றும் 4ம் தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் 4 மாவட்டங்களும் வெள்ளத்தில் மூழ்கின.

இந்த மழையால் ஏற்பட்ட வெள்ள நீர் படிப்படியாக வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது சென்னை உள்பட 4 மாவட்டங்களும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளன. இத்தகைய சூழலில் தான் தமிழ்நாட்டில் தென்மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விடாத மழை.. குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு.. குளிக்க தடை.. வீடியோ பாருங்க! எவ்ளோ தண்ணீர்
அதன்படி நேற்று இரவு முதல் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதற்கிடையே தான் இன்று தென்மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் விடாமல் மழை பெய்து வருகிறது.
வெள்ளத்தில் மிதக்கும் செட்டிகுளம் திருநெல்வேலி pic.twitter.com/a8Z0kuFihK
— Tenkasi Weatherman (@TenkasiWeather) December 17, 2023
திருநெல்வேலியை எடுத்து கொண்டால் டவுன், வண்ணாரபேட்டை, பாளையங்கோட்டை, என்ஜிஓ காலனி, திசையன்விளை, நாங்குநேரி, ராதாபுரம், மாஞ்சோலை, அம்பை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் நுழைந்துள்ளது. திருநெல்வேலியின் வண்ணாரப்பேட்டை சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஜங்ஷன் பஸ் நிலையத்தில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளன. இதில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலையில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் சுற்றி உள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது காணொளி நன்றி நாராயணன்.@ChennaiRains @praddy06 @MasRainman @kalyanasundarsv @narayananweath1 @TutyRains @Mselvak44272998 @chennaisweather @HaiyanTip @RainStorm_TN pic.twitter.com/hzFiAAk129
— TUTY SALT PAN WEATHER (Ramanathan) (@ramanathan4548) December 17, 2023
இந்நிலையில் தான் திருநெல்வேலி மாவட்டத்தில் பல ஊர்களுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதில் பயமின்றி பெண்கள், சிறுவர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர். சிலர் நீச்சலடிக்கும் நிலையில் பலர் நீச்சல் பழகுகின்றனர். இதுதொடர்பான வீடியோ என்பது இணையதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இணையதளங்களில் பரவும் இந்த வீடியோ என்பது செட்டிகுளம் மற்றும் ராதாபுரம் பகுதியில் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பொதுமக்கள் ஆபத்தை உணராமல் தாமிரபரணி, குளம், குட்டைகள் அருகே செல்லாமல் வீடுகளில் பாதுகாப்பாக இருப்பது அவசியமாகும்.












Click it and Unblock the Notifications