திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராணுவத்தில் பலியானால் கூட மனசு ஆறியிருக்கும்.. அநியாயமா கொன்னுட்டாங்களே.. நெல்லை மாணவர் தாய் கண்ணீர்

Google Oneindia Tamil News

நெல்லை: என் மகனை நாட்டுக்காக இழந்திருந்தால் கூட பெருமை அடைந்திருப்பேன் என நெல்லையில் பள்ளி மாணவன் அடித்து கொல்லப்பட்ட விவகாரத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் தாய் கண்ணீர் பேட்டி அளித்துள்ளார்.

Recommended Video

    ராணுவத்தில் பலியானால் கூட மனசு ஆறியிருக்கும்.. அநியாயமா கொன்னுட்டாங்களே.. நெல்லை மாணவர் தாய் கண்ணீர்

    நெல்லை மாவட்டம், பாப்பாக்குடி பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் மகன் செல்வ சூர்யா (17). பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

    6-8 மணி நேர மின் தடை.. இருளில் மூழ்கிய வடமாநிலங்கள்.. குஜராத், உ.பி, ம.பியில் நிலைமை மோசம்.. பின்னணி6-8 மணி நேர மின் தடை.. இருளில் மூழ்கிய வடமாநிலங்கள்.. குஜராத், உ.பி, ம.பியில் நிலைமை மோசம்.. பின்னணி

    இந்த நிலையில் சாதி ரீதியாக ஏற்பட்ட கோஷ்டி மோதலில்அதே பள்ளியல் பிளஸ் 1 படிக்கும் மூன்று மாணவர்களால் அடித்து கொல்லப்பட்டார். இதையடுத்து மூன்று மாணவர்களையும் போலீஸார் கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.

    நெல்லை

    நெல்லை

    இந்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பள்ளி ஆசிரியர்கள் அலட்சியமாக செயல்பட்டதாகவும் ஆசிரியர்கள் மீதும் தனது மகனை கொலை செய்த 3 மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை ஆட்சியர் விஷ்ணுவிடம் மாணவனின் தாய் புகார் அளித்துள்ளார்.

    தாய் பேட்டி

    தாய் பேட்டி

    இதுகுறித்து உயிரிழந்த மாணவனின் தாய் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எனது மகன் நன்றாக படித்து வந்தான். வசதி இல்லாததால் அரசு பள்ளியில் படிக்க வைத்தோம். பரிட்சை எழுத சென்ற எனது மகன் வீடு திரும்பவில்லை. சம்பவம் நடந்து 2 மணி நேரமாக ஆசிரியர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு காத்திருந்துள்ளனர்.

    கார்

    கார்

    ஆசிரியர்கள் சிலர் கார் வைத்துள்ளார்கள். காரில்தான் பள்ளிக்கு வருகிறார்கள். அவர்கள் நினைத்திருந்தால் காரில் எனது மகனை அழைத்து சென்று காப்பாற்றியிருக்கலாம். அவனுடன் படிக்கும் மற்ற பசங்க தான் என் மகனை அழைத்து சென்றுள்ளனர். போலீஸாரும் தகவல் சொல்லவில்லை.

    வம்புக்கு செல்லாத மகன்

    வம்புக்கு செல்லாத மகன்

    எனது மகன் யாரிடமும் வம்புக்கு போக மாட்டான். அந்த அளவுக்கு எங்கள் நிலைமை வறுமையில் உள்ளது. எனது கணவர் ராணுவத்தில் சேர நினைத்தார், ஆனால் அவரால் முடியவில்லை. எனவே எனது மகனையாவது ராணுவத்தில் சேர்த்து நாட்டுக்காக உழைக்க வைக்க நினைத்தோம். ஆனால் எனது மகனை படுகொலை செய்து விட்டனர்.

    மகன் நாட்டுக்காக இழந்திருந்தால்

    மகன் நாட்டுக்காக இழந்திருந்தால்

    இனிமேல் வேறு எந்த குழந்தைகளுக்கும் இந்த நிலை வரக்கூடாது எனவே அலட்சியமாக இருந்த ஆசிரியர்கள் மற்றும் எனது மகனை கொன்ற மாணவர்கள் மீது தக்க தண்டனை கொடுக்க வேண்டும் அவனை கொடூரமாக அடித்துள்ளனர். எனது மகனை நாட்டுக்காக இழந்தால் கூட பெருமை அடைந்திருப்பேன். வேறு எந்த எந்த பெற்றோருக்கும் இந்த நிலை வரக்கூடாது என்று தெரிவித்தார்.

    English summary
    Mother says if she would have been happy if my son died in army. Her son stabbed to death by 3 students.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X