• search
திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

நெல்லை மேயர் தேர்தல்; யாருக்கு அல்வா; சமுதாயம் Vs விசுவாசம்; பரபரக்கும் தாமிரபரணி நகர்!

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் யாருக்கு யார் அல்வா கொடுக்கப்போகிறார்கள் என்பதே இப்போது அங்கு எழுந்துள்ள விவாதமாகும்.

நெல்லை மேயர் வேட்பாளர் தேர்வு விவகாரத்தில் திமுக மாவட்டச் செயலாளரான அப்துல் வஹாப்புக்கும் மாவட்ட பொறுப்பு அமைச்சரான ராஜகண்ணப்பனுக்கும் மாறுபட்ட கருத்துக்கள் இருப்பதால் யார் கை ஓங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

ஒரு காலத்தில் தமிழகத்திலேயே திமுகவில் அதிக உட்கட்சி பஞ்சாயத்துக்கள் நடைபெற்றதால் நெல்லை எப்போதுமே தொல்லை என கருணாநிதியால் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நெல்லை மாநகராட்சி தேர்தல் விறுவிறு.. வந்து இறங்கிய பெங்களூர் இன்ஜினியர்கள்! நெல்லை மாநகராட்சி தேர்தல் விறுவிறு.. வந்து இறங்கிய பெங்களூர் இன்ஜினியர்கள்!

அல்வா நகரம்

அல்வா நகரம்

அல்வா மூலம் தமிழகம் மட்டுமின்றி உலகளவில் பிரசித்தி பெற்ற நகரம் திருநெல்வேலி. இதேபோல் தாமிரபரணி ஆறும், பேச்சு வழக்கும் நெல்லை மண்ணின் தனிச்சிறப்புகளாக கருதப்படுகின்றன. இப்படி பல பெருமைகளை உள்ளடக்கிய நெல்லை கடந்த 1994-ம் ஆண்டு தான் மாநகராட்சியாக அந்தஸ்து பெற்றது. இதுவரை 1996, 2001, 2011,2014 என நான்கு முறையும் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்ட பெண் வேட்பாளர்கள் தான் நெல்லை மேயர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஒரே ஒரு முறை 2006-ம் ஆண்டு மட்டும் திமுக சார்பில் ஏ.எல்.சுப்ரமணியன் நெல்லை மேயரானார்.

சமுதாயம்

சமுதாயம்

நெல்லை மாநகராட்சி எல்லைக்குள் பிள்ளைமார், முக்குலத்தோர், சிறுபான்மையினர் என மூன்று தரப்பினரின் வாக்குகளும் சமபலமாக திகழ்கின்றன. இதனால் இந்த மூன்று பிரிவுகளில் இருந்தே வேட்பாளர் தேர்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் முக்குலத்தோர் கோட்டாவில் மாணவரணி மாவட்ட பொறுப்பாளர் துரைசங்கீதாவும் பிள்ளைமார் கோட்டாவில் முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன் குடும்பத்தில் இருந்து ஒருவரும் ரேஸில் முந்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

நேரடி அறிமுகம்

நேரடி அறிமுகம்

திமுக மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப்பின் சாய்ஸ் ஏ.எல்.எஸ். குடும்பத்திலிருந்து ஒருவரை மேயராக்க வேண்டும் என்பதாம். இதனிடையே வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி கனிமொழி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி போன்றோரிடம் நேரடி அறிமுகம் உள்ள ஆந்திர மாநில திமுக நிர்வாகி ராஜவர்மன், தனது மனைவி துரை சங்கீதாவை மேயர் தேர்தலில் களமிறக்க தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாறுபட்ட நிலை

மாறுபட்ட நிலை

இதேபோல் சிறுபான்மையினர் கோட்டாவில் முன்னாள் மேயர் விஜிலா சத்யானந்த் மீண்டும் சீட்டு கேட்கும் நிலையில் அதற்கு தலைமையிடம் இருந்து பெரிய ரெஸ்பான்ஸ் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் கனிமொழியும், தானும் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்ததால் அந்த நட்பு மூலம் தனக்கு சீட் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார் விஜிலா சத்யானந்த். இப்படி ஒரு டஜனுக்கும் மேற்பட்டோர் மேயர் சீட் எதிர்பார்த்து காய் நகர்த்தி வருவதால் யாரை தேர்வு செய்ய பரிந்துரைப்பது என்ற விவகாரத்தில் திமுக மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப்புக்கும் மாவட்ட பொறுப்பு அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் இடையே மாறுபட்ட நிலைப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பத்திரிகையாளர்

பத்திரிகையாளர்

இதனிடையே முன்னணி செய்தி தொலைக்காட்சிகள் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் உயர் பதவிகளை வகித்த பத்திரிகையாளர் ஒருவரும் நெல்லை மாநகராட்சி தேர்தலில் 37-வது வார்டை எதிர்பார்த்து தலைமையிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். இவருக்கு மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப்பின் பூரண ஆசியும் ஆதரவும் இருப்பதால் சீட் உறுதி என்ற நிலைப்பாட்டோடு இப்போதே வார்டுக்குள் வாக்கு சேகரிக்கவும் ஆரம்பித்துவிட்டார்.

English summary
Opportunity for whom in the Nellai Corporation mayor candidate?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X