மழைக்கு மரியாதை கொடுங்கடா தம்பிகளா.. ஒதுங்கி நின்ற தொண்டர்களை கண்டித்த சீமான்.. என்ன நடந்தது?
நெல்லை: நாதக சார்பாக நடத்தப்பட்டு வரும் கடலம்மா மாநாட்டில் கொட்டும் மழையில் சீமான் உரையாற்றிய போது, மழையில் நனையாமல் இருக்க ஒதுங்கி தொண்டர்களை கண்டித்திருக்கிறார். மழைக்கு மரியாதை கொடுக்க கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறிய சீமான், கடன் மனிதருக்கு செய்யும் நன்மைகள் குறித்து பேசினார்.
நாம் தமிழர் கட்சி சார்பாக சுற்றுச்சூழல் பிரச்சனைகளை முன் வைத்து தொடர்ச்சியாக பல்வேறு மாநாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே மதுரையில் ஆடு - மாடுகள் மாநாடு நடத்தி சீமான் பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார். தொடர்ந்து மரங்கள் மாநாடு, மலைகள் மாநாடு உள்ளிட்டவற்றை நடத்திய சீமான், இயற்கை பாதுகாப்பை கோரிக்கையாக முன் வைத்தார்.

அந்த வகையில் கடல்சார் வாழ்வாதாரத்தையும், கடலையும் பாதுகாக்கும் நோக்கத்துடன், ஆதி நீயே.. ஆழித்தாயே என்ற முழக்கத்தை முன் வைத்து நெல்லை மாவட்டம் கூத்தன்குழியில் கடலம்மா மாநாட்டை சீமான் நடத்தி வருகிறார். இந்த மாநாட்டில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டின் இடையே திடீரென மழை பெய்யத் தொடங்கியது. இதன் காரணமாக அங்கிருந்த சேர்களை கையில் எடுத்துக் கொண்ட நாதகவினர், மழையில் நனையாமல் இருக்க தலைக்கு மேல் கொண்டு சென்று மறைத்து கொண்டனர். இன்னும் சிலரோ, மழையில் நனையாமல் இருக்க கொஞ்சம் ஓரமாக ஒதுங்கி நின்றனர். இதனை மழையில் நனைந்தவாறே சீமான் கவனித்து கொண்டு உரையாற்றினார்.
பின்னர் திடீரென சீமான், மழைதான்யா.. கடலம்மாவை பேசும் போது மழை வரவில்லை என்றால், பிறகு கடலுக்கு என்ன மரியாதை இருக்கிறது.. நீ நனைந்தால் முளைப்பதற்கு வெங்காயமும் அல்ல.. விதையோ, பூண்டோ இல்லை.. மழைக்கு மரியாதை கொடுக்க கற்றுக்கொள்ளுங்கடா தம்பிகளா.. சேரினை இறக்குங்கடா என்று கண்டித்தார்.
தொடர்ந்து, சாதாரண மழை தான்யா உக்காரு.. குண்டு மழை பெய்யும் போதே ஓடாம ஒரே இடத்தில் நின்ற வீரர்கள் நம்ம.. சாதாரண குளிர் மழைக்கா போய்டுவோம்.. என்றார். பின்னர் மழை நின்றபின், சும்மா நம்மை வாழ்த்துவிட்டு போய்விட்டது என்று தெரிவித்தார். சீமானின் இந்த பேச்சு டிரெண்டாகி இருக்கிறது.
நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்டதில் இருந்தே மழை பெய்தாலும், நனைந்து கொண்டே சீமான் தொடர்ந்து உரையாற்றும் பழக்கம் கொண்டவர். தற்போது நாதகவினர் மழையில் நனையாமல் ஒதுங்கி நின்றதற்கு சீமான் கண்டித்திருப்பது பலரின் கவனத்தையும் திருப்பி இருக்கிறது.
-
Land Rover Defender கான்வாயில் வரும் ஸ்டாலின் பெயரில் ஒரு வாகனம் கூட இல்லை! சீமான் சொத்து எவ்வளவு? -
"150 கிராம் தங்கம், ரூ.39 லட்சம் சொத்து.. ரூ.5.11 லட்சம் கடன்.." சீமானின் சொத்து மதிப்பு இதுதான் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
Thirumavalavan: சிதம்பரம் இடைத்தேர்தல் செலவை திருமாவளவன் ஏற்பாரா? சீமான் கேள்வி -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications