14 வயது பள்ளி மாணவி.. 7 மாதம் கர்ப்பம்.. ஏமாற்றியே சிதைத்த காமக்கொடூர காவலாளி.. தட்டி தூக்கிய போலீஸ்
திருவள்ளூர்: ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய காவலாளியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்டவர் சிறுமி என்பதால் ஏமாற்றிய காவலாளி மீது குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் ( போக்சோ) பாய்ந்துள்ளது.
பள்ளி மாணவியை ஏமாற்றிய நபரின் பெயர் பாஸ்கர் என்பதாகும். இவர் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த விளாங்காடு பாக்கம் பகுதியை சேர்ந்தவர். பாஸ்கருக்கு திருமணமாகி மகன் மகள் உள்ளனர்.
சென்னை மாதவரம் தபால் பெட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் காவலாளியாக பாஸ்கர் வேலை செய்து வந்தார்.பள்ளியில் நடவடிக்கை சரியில்லாததால் பாஸ்கரை பணியில் இருந்து நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது.

அத்துமீறிய பாஸ்கர்
வேலையிழந்த பாஸ்கர் அதே பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியை ஏமாற்றி அவரிடம் தவறாக நடந்து கொண்டதாக தெரிகிறது. மாணவிக்கு உடல் நலம் பாதிக்கப்படவே சந்தேகமடைந்த பெற்றோர் விசாரணை செய்தனர்.

7 மாத கர்ப்பம்
அந்த மாணவி ஏழுமாத கர்ப்பமாக இருப்பது தெரியவரவே, மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். கர்ப்பத்திற்கு காரணம் குறித்து விசாரித்த போது, பள்ளியின் முன்னாள் காவலாளி பாஸ்கர்தான் காரணம் என்று மாணவி தெரிவித்தார்.

காவலாளி கைது
உடனடியாக மாணவியின் பெற்றோர் சென்னை புழல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாஸ்கர் மீது புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த புழல் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் கண்ணகி இது குறித்து விசாரணை மேற்கொண்டார்.பாஸ்கரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 9ஆம் வகுப்பு மாணவியிடம் தவறுதலாக நடந்து கொண்டது தெரியவந்தது.

போக்சோவில் கைது
இதனையடுத்து பாஸ்கரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருத்தணி கிளை சிறையில் அடைத்தனர். பள்ளிக்கு செல்லும் மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை நடைபெறுவது அதிகரித்து வருகிறது. பள்ளி மாணவியிடம் முன்னாள் காவலாளி ஒருவரை கர்ப்பமாக்கிய விவகாரம் புழல் பகுதியில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications
