திருவள்ளூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சசிகலா "பழி".. கண்ணை மூடிக்கிட்டு.. அப்படியே சிலை போல நின்ற சுதாகரன்.. தர்காவில் கேட்ட "ஜெ" பெயர்!

Google Oneindia Tamil News

திருவள்ளூர்: நேற்று ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் திடீரென தர்காவில் இரவில் வழிபாடு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Recommended Video

    ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை போலி என்பதை ஊரே சொல்கிறது | டிடிவி தினகரன்

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெளியாகி இருக்கும் ஆறுமுகசாமி ஆணைய ரிப்போர்ட் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த ஒரு அறிக்கையின் சூடு இன்னும் தணியவில்லை.

    3 வருட நீண்ட விசாரணைக்கு பின் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை தற்போது அதிமுகவின் அனைத்து அணிகளையும் போட்டு ஆட்டிப்படைத்துக்கொண்டு இருக்கிறது.

    இதில் சசிகலா. கேஎஸ் சிவக்குமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர்,விஜயபாஸ்கர். அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேரை குற்றம் செய்தவர்களாக கருதி விசாரிக்க வேண்டும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    பள்ளி மாணவர்களை குறிவைத்து விதவிதமான போதை பொருட்கள்.. “கவனிக்கிறீங்களா இல்லையா?” - கொதித்த சசிகலா! பள்ளி மாணவர்களை குறிவைத்து விதவிதமான போதை பொருட்கள்.. “கவனிக்கிறீங்களா இல்லையா?” - கொதித்த சசிகலா!

    அறிக்கை

    அறிக்கை

    முக்கியமாக இந்த அறிக்கை சசிகலாவை நேரடியாக குற்றஞ்சாட்டி உள்ளது. முக்கியமாக சசிகலா ஜெயலலிதா இடையிலான உறவு குறித்தும் இதில் கடுமையான குற்றச்சாட்டுகளை ஆறுமுகசாமி ஆணையம் வைத்து உள்ளது. ஜெயலலிதாவுடன் சசிகலா மீண்டும் இணைந்த பிறகு இருவருக்கும் சுமூக உறவு இல்லை. பிரிவிற்கு பின் இவர்கள் சேர்ந்த போது அவர்களிடம் சுமுகமான உறவு இல்லை. ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சையே அளிக்கவில்லை. ஜெயலலிதா இறந்த நேரத்திலும் முரண்பாடு என ஆறுமுகசாமி ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

    சசிகலா

    சசிகலா

    இந்த அறிக்கை தொடர்பாக சசிகலா தனது உறவினர்களிடம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பேசி வருகிறாராம். எனக்கு எதிராக இவர்கள் குற்றம் சாட்டுவார்கள் என்று தெரியும். அதை நான் எதிர்பார்த்துதான் இருந்தேன். ஆனால் இவர்கள் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளனர். என் மீது பழி போட வேண்டும் என்று இப்படி செய்து இருக்கிறார்கள். நான் அரசியலுக்கு வர கூடாது என்று நினைக்கிறார்கள்.

    உறவினர்கள்

    உறவினர்கள்


    நான் வந்தால் சிலரின் காரியங்கள் நிறைவேறாது. அதனால் ஏதாவது செய்து என்னை முடக்க நினைக்கிறார். என் அக்காவிற்கு நான் அப்படி செய்வேனா. உங்களுக்கெல்லாம் தெரியாததா? என்று சசிகலா தனது நெருங்கிய உறவினர்களிடம் தெரிவித்து வருகிறாராம். சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற போது சொந்தங்கள் யாரும் தன்னுடன் உடன் இல்லை. ஆனால் இந்த விவகாரத்தில் தன் பக்கம் சொந்தங்கள் எல்லோரும் உடன் நிற்க வேண்டும்.

    சொந்தங்கள் முக்கியம்

    சொந்தங்கள் முக்கியம்

    தினகரன், திவாகரன் என்று வேறுபாடு இன்றி எல்லோரும் தன்னுடன் நிற்க வேண்டும் என்று சசிகலா ஆசைப்படுகிறாராம். குடும்பங்களின் ஆதரவு தனக்கு இருக்க வேண்டும் என்று சசிகலா தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார். இந்த வழக்கில் போலீஸ் விசாரணை விரைவில் ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போலீஸ் விசாரணைக்கு முன்பாக சொந்தங்கள் எல்லோரையும் தன் பக்கம் கொண்டு வர வேண்டும் என்பதில் சசிகலா தீர்க்கமாக இருக்கிறாராம்.

    போலீஸ் விசாரணை

    போலீஸ் விசாரணை

    இதில் சுதாகரன்தான் பிடிபடாமல் இருப்பதாக கூறுகிறார்கள். சுதாகரன் பெரும்பாலும் தனித்தே இருக்கிறார். ரூபாய் 10 கோடி அபராத தொகையை கொடுக்காத சொந்தங்கள் வேண்டாம். இவர்களால்தான் ஒரு வருடம் கூடுதலாக சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருந்தேன் என்ற கோபத்தில் சுதாகரன் இருக்கிறாராம். சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மகன் சுதாகரன். இவரை ஜெயலலிதா வளர்ப்பு மகனாக வளர்த்து வந்தார். இந்த நிலையில்தான் சுதாகரன் இந்த ஆறுமுகசாமி அறிக்கை காரணமாக அப்செட்டில் இருக்கிறாராம்.

    கோபம் சுதாகரன்

    கோபம் சுதாகரன்

    எங்க அம்மாவிற்கு என்ன ஆனது என்று விசாரிக்க வேண்டும் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சுதாகரன் தெரிவித்து வருகிறாராம். இந்த அறிக்கை வந்ததில் இருந்தே அவர் கொஞ்சம் அப்செட்டில் இருப்பதாகவே கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று திடீரென திருவள்ளூர் பொன்னேரியில் உள்ள தர்காவில் திடீரென சுதாகரன் வழிபாடு நடத்தினார். அங்கே நேற்று இரவு சென்ற சுதாகரன் நீண்ட நேரம் கண்களை மூடி நின்றார்.

    சிலை போல நின்றார்

    சிலை போல நின்றார்

    கண்களை மூடி சிலை போல நின்று நீண்ட நேரம் வழிபாடு செய்தார். அதன்பின் அங்கிருந்த விளக்கை ஏற்றி நீண்ட நேரம் பிரார்த்தனை செய்தனர். அங்கிருந்த சிலர்.. ஜெயலலிதா வளர்ப்பு மகன் வந்திருக்கிறார் என்று கூறி அவரை பார்க்க கூடினார்கள். சிலர் ஜெயலலிதா பெயரை சொல்லி சுதாகரனிடம் பேச முயன்றனர். சிலரிடம் பேசிய சுதாகரன் அதன்பின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். கடந்த சில மாதங்களாக வெளியே வராமல் இருந்த சுதாகரன் திடீரென இப்படி தர்காவில் வழிபட்ட சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    Arugumasamy Jayalalitha Report: Sasikala relative Sudhakaran suddenly goes to Mosque.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X