100வது சுதந்திர தினத்தில் இந்தியா வல்லரசு ஆகும்! மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மிகத் திட்டவட்டம்!
திருவள்ளூர்: 100வது சுதந்திர தினத்தில் இந்தியா வல்லரசு ஆகும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மிகத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்தியா எல்லா துறைகளிலும் முன்னேற்றப் பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதாக கூறி பெருமிதம் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.

எல்.முருகன்
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் நடைபெற்ற மத்திய அரசு விழா ஒன்றில் கலந்துகொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் மத்திய அரசின் சாதனைகளையும், பிரதமர் மோடியின் செயல்பாடுகளையும் பட்டியலிட்டு பெருமிதம் தெரிவித்தார். காசிக்கும் தமிழகத்திற்கும் கலாச்சார பண்பாட்டு உறவு காலம் காலமாக இருந்து வருவதாக கூறிய அவர், காசிக்கும் தென்காசிக்கும், காசிக்கும் சிவகாசிக்கும், காசிக்கும் ராமேஸ்வரத்துக்கும் என இப்படி ஒரு பெரிய பந்தம் நீடித்து வருவதாக தெரிவித்தார்.

காசி தமிழ் சங்கமம்
காசிக்கும் தமிழகத்திற்கும் இடையே உள்ள பந்தத்தை வலுப்பெறச் செய்யும் வகையில் காசி தமிழ் சங்கமம் நடத்தப்பட்டதாக கூறிய அவர், எதைச் சொல்கிறதோ அதைத் தான் செய்து வருவதாக மத்திய அரசுக்கு பாராட்டும் தெரிவித்தார். இதனிடையே மத்திய அரசு முன்னெடுத்துள்ள பல்வேறு திட்டங்களால் இந்தியாவில் புதிய தொழில்முனைவோர்கள் பலர் உருவாகியிருக்கிறார்கள் என்றும் உலகிலேயே அதிக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ள நாடு இந்தியா தான் எனவும் பெருமிதம் தெரிவித்தார்.

இந்தியா வல்லரசு
இந்தியா எல்லா துறைகளிலும் முன்னேற்றப் பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதாக கூறிய அவர், 100வது சுதந்திர தினத்தில் இந்தியா வல்லரசு ஆகும் என நம்பிக்கை பொங்கக் கூறியிருக்கிறார். இது பெருமைக் கொள்ள வேண்டிய விஷயம் எனத் தெரிவித்த அவர், மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் பேசினார். இதனிடையே மத்திய அரசு நிகழ்ச்சிகளை மாவட்டந்தோறும் நடத்தி அதில் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.

பாஜக சச்சரவு
தமிழக பாஜகவில் திருச்சி சூர்யா -டெய்சி சரண் இடையே நடந்த அநாகரீக வார்த்தைப் போர், காய்த்ரி ரகுராம் நீக்கம், யூடியூப்களில் பேசுவதற்கு வாய்ப்பூட்டு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications