இன்று கார்த்திகை தீபம்! வீடுகளில் தீபமேற்ற நல்ல நேரம் எது? எத்தனை விளக்குகள் ஏற்றணும்?
சென்னை: கார்த்திகை தீபம் (Karthigai Deepam 2025) இன்று கொண்டாடப்படும் நிலையில் வீடுகளில் தீபமேற்ற உகந்த நேரம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது.
இதுகுறித்து ஆத்ம ஞான மையம் யூடியூப் சேனலில் ஆன்மீக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி கூறியிருப்பதாவது: திருக்கார்த்திகை தீபம் என்பது சிவ வழிபாட்டுக்குரிய ஒரு முக்கியமான விரத நாள். ஆண்டுதோறும் வரும் விரதங்களை ஒருவரால் கடைபிடிக்க முடியாவிட்டாலும் கூட இந்த கார்த்திகை தீப விரதத்தையாவது அவர்கள் சரியாக கடைபிடித்தால் அவர்களுக்கு சிவபெருமானின் அருள் கிடைக்கும்.

அண்ணாமலையாரை ஜோதியாக பார்க்கக் கூடிய நாள். அது மட்டுமல்லாமல் ஆண்டிற்கு ஒருமுறை அர்த்தநாரீஸ்வரரையும் நாம் வழிபாடு செய்கிறோம். அர்த்தநாரீஸ்வரரின் அற்புத காட்சியை தரிசனம் செய்ய ஆண்டு முழுவதும் காத்திருக்கும் பக்தர்களின் மனதை குளிர்விக்க மிக ஆனந்தமாக ஆடிக் கொண்டே வந்து காட்சி தரும் நாள் இது.
பவுர்ணமி
பொதுவாக பவுர்ணமியுடன் கூடிய நாளாக கார்த்திகை தீபம் வரும். ஆனால் இந்த ஆண்டு இன்று பவுர்ணமி வரவில்லையே, 4ஆம் தேதியான நாளைதானே பவுர்ணமி வருகிறது. அப்ப 3 ஆம் தேதியான இன்று எப்படி கார்த்திகை தீபம் என சொல்கிறார்களே என நீங்கள் கேட்பீர்கள்.
கார்த்திகை நட்சத்திரம்
சில ஆண்டுகளில் பவுர்ணமியுடன் சேராமல் கார்த்திகை நட்சத்திரத்துடன் கணக்கு செய்து கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடப்படும். கார்த்திகை என்பதுதான் உகந்த நட்சத்திரம் எனவே அந்த நாளில்தான் வீடுகளில் தீபம் ஏற்றப்பட வேண்டும். கார்த்திகை மாதத்தில் வரக் கூடிய கார்த்திகை நட்சத்திரத்தன்று இறைவன் ஜோதி ஸ்வருமாக காட்சி தருகிறார். சிவபெருமானுக்கு இந்த நாள் எத்தனை விசேஷமோ அத்தனை விசேஷம் முருகனுக்கும்! கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டவர்தான் முருகன்!
விரதமுறை
இன்று விரதமிருக்க நினைப்பவர்கள் காலை முதல் ஒரு பொழுது இருங்கள். இடையிடையே பழச்சாறு, பால், இளநீர் எடுத்துக் கொள்ளலாம். இந்த நாளில் மவுன விரதம் இருப்பது விசேஷம்! புதிதாக மவுன விரதம் இருப்போர், திடீரென பேசிவிட்டால் உடனே தப்பு செய்துவிட்டோம் என நினைத்து விரதத்தை விட்டுவிட வேண்டாம், முருகா, ஓம் நமச்சிவாய, அண்ணாமலையாருக்கு அரோகரா என கூறிவிட்டு விரதத்தை தொடருங்கள். மாலை தீபம் ஏற்றும் வரை மவுன விரதத்தை எடுத்துக் கொள்ளலாம்.
தீபமேற்றும் நேரம்
கிருத்திகை நட்சத்திரம் இன்று மாலை 4.48 மணி முதல் நாளை (4.12.2025) மாலை 3.08 மணி வரை இருக்கிறது. பவுர்ணமியானது நாளை டிசம்பர் 4ஆம் தேதி காலை 7.55 மணிக்கு தொடங்குகிறது. தீபம் ஏற்றும் போது கார்த்திகை நட்சத்திரம் இருக்க வேண்டும் என்பதால் இன்று மாலை 6 மணிக்கு மேல் தீபம் ஏற்றலாம்.
எத்தனை தீபம் ஏற்றலாம்
குறைந்தபட்சம் 27 தீபங்களை ஏற்றலாம். 27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் ஏற்றலாம். இந்த 27 என்பது வெறும் அகல்களை மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும். வீட்டு பூஜை அறையில் ஏற்றும் விளக்குகள் அல்ல. சமையலறை, மொட்டை மாடி, பால்கனி, மாடி படிகட்டு, கழிவறை, கிணறு, அம்மிக்கல், ஆட்டுக்கல், குப்பைகளை குவிக்கப்படும் இடம் என எல்லா இடங்களிலும் தீபம் ஏற்றலாம்.
முதலில் எங்கு தீபம் ஏற்ற வேண்டும்
மாலை 6 மணிக்கு விளக்கு ஏற்ற வேண்டும் என்பதால் அகல்களில் எண்ணெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு எங்கெல்லாம் வைக்க வேண்டுமோ அங்கெல்லாம் வைத்துவிட்டு பின்னர் அண்ணாமலையார் கோயிலில் தீபம் ஏற்றியதும், அண்ணாமலையாருக்கு அரோகரா என சொல்லிவிட்டு வீடுகளில் விளக்கு ஏற்றுங்கள். முதலில் வாசலில் தீபம் ஏற்ற வேண்டும். பின்னர் அங்கிருந்து பூஜை அறைக்கு தீபத்தை கொண்டு வாருங்கள், பிறகு வீடு முழுக்க ஏற்றுங்கள் என தெரிவித்துள்ளார்.
4500 கிலோ நெய்
திருவண்ணாமலையில் இன்று மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நேற்றே மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. சுமார் 2668 அடி உயர மலை உச்சியில் 4500 கிலோ சுத்தமான ஆவின் நெய் ஊற்றி 1500 மீட்டர் காட்டன் திரியை வைத்து தீபம் ஏற்றப்படும். இந்த தீபம் 10 நாட்களுக்கு அப்படியே இருக்கும். மழை, காற்று என எதுவாக இருந்தாலும் அணையாமல் இருக்கும் என்பது சிவனின் சக்தி.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications