திருவண்ணாமலையில் 2668 அடி உயர மலை மீது ஏற்றப்பட்ட மகா தீபம் - ஜோதி பிளம்பாக ஒளிர்ந்த அருணாசலேஸ்வரர்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு 2668 உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை: கார்த்திகை தீப திருவிழவை முன்னிட்டு திருவண்ணாமலையில் 2668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டதை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். அப்போது எழுந்த அரோகரா முழக்கம் விண்ணை எட்டியது. கோவில்களில் மட்டுமல்லாது வீடுகளிலும் விளக்கேற்றி பக்தர்கள் கார்த்திகை தீப திருவிழாவை கோலாகலமாக கொண்டாடினர்.
சிவபெருமானில் பஞ்ச பூத தலங்களில் பக்தர்களால் நெருப்புத்தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலை. சிவபெருமான் மலை வடிவமாக காட்சி அளிப்பதாக ஐதீகம். இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கார்த்திகை மாத தீபத் திருவிழா கடந்த வாரம் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினசரியும் பஞ்ச மூர்த்திகள் ஊர்வலம் நடைபெற்றது.
சில தினங்களுக்கு முன்பு எளிமையான முறையில் தேரோட்டம் நடைபெற்றது. மலை மீது மகா தீபம் ஏற்றுவதற்காக பிரம்மாண்ட கொப்பரை நேற்று சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் மலை உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. தீபம் ஏற்றுவதற்காக 3500 லிட்டர் நெய் மற்றும் ஆயிரம் மீட்டர் காடா துணிகளும் அடுத்தடுத்து மலை உச்சிக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

பரணி தீப தத்துவம்
தீபத்திருவிழாவின் 10ஆம் நாளான இன்று அதிகாலை மூன்றரை மணிக்கு அண்ணாமலையார் கருவறை முன்பாக ஏகன் அனேகனாக மாறியும், அனேகன் ஏகனாக மாறும் தத்துவத்தை விளக்கும் விதமாக சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் அருணாச்சலேஸ்வரர் கோவிலின் உள்பிரகாரத்தில் வலம் வந்து உண்ணாமுலையம்மன் உள்ளிட்ட அனைத்து சந்நிதானங்களிலும் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கட்டளைதாரர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஜோதியாக ஒளிர்ந்த அண்ணாமலையார்
அண்ணாமலையார் ஆலயத்தில் மாலையில் சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் அர்த்தநாரீஸ்வரர் நடனமாடியபடி காட்சி அளித்தார். சரியாக மாலை 6 மணிக்கு சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்பட்டது. அந்த விளக்கு ஒளி தென்பட்ட அதே நேரத்தில் 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தர்கள் முழக்கமிட்டது எங்கும் எதிரொலித்தது. இதனையடுத்து வீடுகளிலும் அனைவரும் தயாராக வைத்திருந்த விளக்குகளை ஏற்றினர். கோவில்களில் மின் விளக்குகள் எரிய விடப்பட்டதை அடுத்து ஒளி வெள்ளம் பரவியது. வான வேடிக்கைகளும் நடைபெற்றன.

20 ஆயிரம் பக்தர்கள் கிரிவலம்
கார்த்திகை தீபத்திருவிழாவை யொட்டி இன்றைய தினம் உள்ளூர் பக்தர்கள் வெளியூர் பக்தர்கள் என 20 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. அனைவரும் கிரிவலம் வந்தனர். அதே நேரத்தில் கோவிலுக்குள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. மலைமீது ஏறவும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

வீடுகளில் தீப ஒளி
திருக்கார்த்திகையின்போது குறைந்தபட்சம் வீடுகளில் 27 தீபங்கள் ஏற்றப்பட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. 27 நட்சத்திரங்களைக் குறிக்கும் வகையில் விளக்குகளை ஏற்ற வேண்டும் என்பதே இதன் ஐதீகம். வீடு முற்றம், சமையலறை, திண்ணை, மாடம், பூஜையறை, கொல்லைப்புறம் என்று அனைத்து இடங்களிலும் தீபம் ஏற்றுவது சிறப்பானது என்பதால் அனைவரும் தீபத்தை ஏற்றி வைத்திருந்தனர். கார்த்திகை தீப திருவிழா தமிழகம் முழுவதும் சிவன், விஷ்ணு ஆலயங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications