கணவர் இல்லாதபோது வீட்டில் காதலனுடன் உல்லாசம்.. கல்யாணம் ஆகலைனு பொய் சொல்லியதால் காதலன் தற்கொலை!
செங்கம்: செங்கம் அருகே ஆன்லைன் மூலம் அறிமுகமாகி காதலியானவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பதை அறிந்த இளைஞர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் அம்ரின் (25). இவரது கணவர் அஜீஸ். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
சென்னை தாம்பரம் சேலையூர் பகுதியை சேர்ந்த பூபதி (21) தனியார் பள்ளியில் வேன் ஓட்டுநராக இருந்து வந்தார். திருமணம் ஆகாத பூபதிக்கும் அம்ரின் ஆகிய இருவருக்கும் இந்த நிலையில் yoyo செயலி மூலம் காதல் ஏற்பட்டுள்ளது.

அம்ரின்
அம்ரின் பூபதியிடம் தன்னை கல்லூரி மாணவி என்றும் தனக்கு திருமணம் நடைபெறவில்லை எனவும் கூறியதால் இருவரும் கடந்த எட்டு மாதமாக yoyo செயலி மூலம் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 20 - ஆம் தேதி தனது வீட்டில் சேலத்தில் உள்ள தனது நண்பரின் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

பூபதிக்கு உண்மை
அம்ரினின் கணவர் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்ததால் செங்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு வருமாறு அவர் பூபதியை அழைத்துள்ளார். அப்போதுதான் அம்ரினுக்கு திருமணமாகி, இரு குழந்தைகள் இருப்பது பூபதிக்கு தெரியவந்தது.

பூபதியுடன் இரு நாட்கள் உல்லாசம்
மேலும் அம்ரினின் கணவர் வீடு திரும்ப சில நாட்கள் ஆகும் என்பதால் தனது வீட்டிலேயே தங்குமாறு பூபதியை கூறியுள்ளார். அப்போது பூபதியுடன் தனது வீட்டிலேயே இரண்டு நாட்கள் அம்ரின் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வருவதாகக் கூறி வெளியே சென்றார் அம்ரின்.

சேலையில் தூக்கு
அப்போது அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்க வீட்டை பூட்டி விட்டு சென்றார். கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த அம்ரினுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது வீட்டில் இருந்த மின்விசிறியில் அம்ரினின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதை கண்ட அம்ரின், புதுப்பாளையம் காவல் நிலையத்திற்கு நேரடியாக சென்று புகார் அளித்துள்ளார்.

பறிமுதல்
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பூபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர். பின்னர் அம்ரினை திருமணம் செய்து கொள்வதற்கு பூபதி எடுத்து வந்த மஞ்சள் தாலி மற்றும் செல்போனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தீவிர விசாரணை
தங்கள் மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக பூபதியின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளார்கள். அம்ரினுக்கு திருமணம் ஆனது தொடர்பாக பூபதி வாக்குவாதம் செய்த போது இருவருக்கும் இடையே தகராறு முற்றி அம்ரினே பூபதியை கொலை செய்துவிட்டு தற்கொலை போல் நாடகமாடுகிறாரா என்ற கோணத்தில் அம்ரினிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங்












Click it and Unblock the Notifications