பிரதான எதிர்கட்சி எது என கேள்வி! பாமகவா? தேமுதிகவா? பாவம் பிரேமலதா விஜயகாந்தே கன்ப்யூஸ் ஆகிட்டாங்க.!
திருவண்ணாமலை : தமிழகத்தில் பிரதான எதிர்கட்சி எது என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு பாட்டாளி மக்கள் கட்சி என்று கூறிய தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் பின்னர் சுதாரித்துக் கொண்டு தேதிமுக என்றார்.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளதோடு, முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு கடந்து உள்ளது.
அதற்கு அடுத்தபடியாக அதிக இடங்களில் வென்ற அதிமுக தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் உள்ளது.

பிரதான எதிர்கட்சி
ஆனால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் யார் பிரதான எதிர்க்கட்சி என்ற போட்டி அதிமுக பாஜக பாமக ஆகிய கட்சிகள் இடையே ஏற்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் பலம் மற்றும் வாக்கு சதவீத அடிப்படையில் அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி என்றாலும் அக்காட்சியில் நிலவும் சில பிரச்சினைகள் காரணமாக களத்தில் இறங்கி அடிக்க முடியாத நிலையில் அதிமுக உள்ளது. இதனைப் பயன்படுத்தி தமிழகத்தில் நாங்கள் தான் பிரதான எதிர்க்கட்சியான பாஜகவும் பாமகவும் போட்டி போட்டு கூறி வருகின்றன.

பிரேமலதா விஜயகாந்த்
இந்நிலையில் தமிழகத்தில் பிரதான எதிர்கட்சி எது என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு பாட்டாளி மக்கள் கட்சி என்று கூறிய தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் பின்னர் சுதாரித்துக் கொண்டு தேதிமுக என பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆரணி அருகே ஏ.சி.எஸ்.கல்வி குழுமம் அறக்கட்டளை சார்பில் புதியதாக கட்டப்பட்ட கோவில் நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று சாமிதரிசனம் செய்தார்.

பாமக தான் எதிர்கட்சி
பின்பு செய்தியாளர்கள் சந்திப்பின் போது, தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சியில் எது பிரதான எதிர்கட்சி என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சட்டென பாமக என்று கூறிய பிரேமலதா விஜயகாந்த் பின்னர் சுதாரித்துக் கொண்டு தேதிமுக தான் என்றார். தொடர்ந்து பேசிய அவர்," திமுக ஆட்சியில் சிறையில் கைதிகள் இறப்பு, லாக்கப் டெத் என்பது அதிகரித்து உள்ளன. இந்த சம்பவம் இனிவரும் காலங்களில் இதனை தடுக்கவேண்டும் என்றார்.

நிர்வாகிகள் குழப்பம்
அதிமுகவின் ஒற்றை தலைமை பற்றி கேட்டதற்கு பதிலளித்த அவர், " ஒற்றை தலைமை என்பது அதிமுக நிர்வாகிகளுக்கிடையேயான உட்கட்சி விவகாரம். அது குறித்து தான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. அதே நேரத்தில் அந்த கட்சியில் போராட்டம் நடந்துகொண்டு இருக்கிறது, அதற்கு அவர்கள் தான் பொறுப்பு" என்று கூறினார்.
-
திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் வந்த பெண்கள்.. நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த கும்பல்.. அதிரடி கைது -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications