10-ம் வகுப்பு மாணவனுடன்.. 35 வயதுடைய பெண் தலைமறைவு.. போலீசார் வலைவீச்சு.. திருவாரூரில் ஷாக்!
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா, எரவாஞ்சேரி அருகே வசித்து வருபவர் பாலகுரு. இவரது மனைவி ராசாத்தி. இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகனும், 13 வயதில் மகளும் உள்ளனர். 15 வயது சிறுவன் எரவாஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
அதே தெருவில் 35 வயதுடைய பெண், கணவருடன் வசித்து வருகின்றனர். இவர்கள் கட்டிட வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 13 வயதில் மகள் உள்ளார். அந்த பெண் அங்கன்வாடியில் சமையல் ஊழியராக பணியில் உள்ளார்.

இருவருக்கும் பழக்கம்
இந்த நிலையில் 35 வயதுடைய பெண்ணுக்கும், 15 வயதே ஆன சிறுவனுக்கும் சில மாதங்களாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் சிறுவனின் பெற்றோர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் தனது மகனை கண்டித்தனர். இதனால் மகனை எரவாஞ்சேரி அக்ரஹார பகுதியில் உள்ள அவரது சித்தி வீட்டில் தங்கவைத்தனர்.

மாயமான சிறுவன்
அங்கிருந்து பள்ளிக்கு சென்று வரும்படி கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து சிறுவன் தனது சித்தி வீட்டில். இருந்தபடியே பள்ளிக்கு சென்று வந்துள்ளான். இந்த நிலையில் கடந்த 26-ம் தேதி அன்று பள்ளிக்கு சென்ற சிறுவன் வீட்டுக்கு திரும்பவில்லை. பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் எல்லா இடங்களிலும் தேடியும் அவனை காணவில்லை...

சிறுவனுடன் தலைமறைவான பெண்
இதுகுறித்து சிறுவனை காணவில்லை என்று எரவாஞ்சேரி காவல் நிலையத்தில் என அவனது தந்தை பாலகுரு புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் புகாரின் அடிப்படையில் விசாரணை செய்தபோது., அதே பகுதியை சேர்ந்த ஒருவர் சிறுவன் மற்றும் 35 வயதுடைய பெண்ணை பள்ளிக்கு அருகில் ஒரு ஆட்டோவில் ஏற்றி அனுப்பி விட்டதாக தெரியவந்துள்ளது.

'போக்சோ' சட்டத்தில் வழக்குப்பதிவு
தொடர் விசாரணையில். ஆட்டோ டிரைவர் அவர்கள் இருவரையும் 'பூந்தோட்டம்' என்ற ஊரில் இறக்கி விட்டு வந்ததாக கூறியுள்ளார்.. இதனை தொடர்ந்து எரவாஞ்சேரி காவல்துறையினர் சிறுவனை கடத்தியதாக 35 வயதுடைய பெண் மீது 'போக்சோ' சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் இருவரையும் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

போலீசார் வலைவீச்சு
அந்த பெண்ணின் செல்போன் எண் 'சிக்னல்' கொண்டு, அவர்கள் இருக்கும் இருப்பிடத்தை அறிய நடவடிக்கை எடுத்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 35 வயதுடைய பெண் 15 வயது சிறுவனுடன் தலைமறைவானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications