பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமை! திருமலை திருப்பதியில் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?
திருப்பதி: திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய சர்வ தரிசனத்தில் 8 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்ததாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் 25 தங்குமிடங்களும் நிரம்பின.
திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வழிபடுகிறார்கள். அது போல் பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கானோர் வருகை தருகிறார்கள். தற்போது புரட்டாசி மாதம் முடிவடைந்த நிலையிலும் ஏழுமலையானை ஏராளமான பக்தர்கள் தரிசிக்கிறார்கள்.

தற்போது தீபாவளி பண்டிகைக்கும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதாம். நவம்பர் 1 ஆம் தேதி திருமலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். தீபாவளியையொட்டி புதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர் விடுமுறை என்பதால் ஏராளமானோர் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
நவம்பர் 9 ஆம் தேதி 73,558 பேர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அது போல் 32,675 பேர் முடி காணிக்கை கொடுத்தனர். உண்டியல் காணிக்கை 3.79 கோடி ரூபாய் ஆகும். சர்வ தரிசனத்திற்கு 9 மணி நேரம் காத்திருந்தனர். அது போல் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் தங்கும் 25 மண்டபங்களும் நிறைந்தன.
ரூ 300 சிறப்பு தரிசனத்திற்கு 4 மணி நேரத்திற்கு மேல் ஆனது. நடைபாதையாக வந்த பக்தர்கள் 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை தரிசனத்திற்காக காத்திருந்தனர். மேலும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன ஷெட்யூலில் அவர்கள் 2 மணி முதல் 3 மணி நேரம் வரை காத்திருந்தனர்.
நவம்பர் 8 ஆம் தேதி 64,983 பேர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அது போல் 25,324 பேர் முடி காணிக்கை கொடுத்தனர். உண்டியல் காணிக்கை 3.49 கோடி ரூபாய் ஆகும். சர்வ தரிசனத்திற்கு 20 மணி நேரம் காத்திருந்தனர். அது போல் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் தங்கும் மண்டபங்கள் நிறைந்தன.
திருமலையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. திருமலையில் கடுங்குளிர் நிலவுகிறது. மேலும் ஆக்ஸிஜன் அளவும் திருமலையில் குறைவாக இருப்பதால் ஆஸ்துமா நோயாளிகள், 60 வயதுக்கு மேற்பட்டோர் யாரும் நடைபாதை வழியாக திருப்பதிக்கு நடந்து வர வேண்டாம் என தேவஸ்தானம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திருப்பதிக்கு மாதந்தோறும் 24 ஆம் தேதி, அதாவது 3 மாதங்களுக்கு முன்பே ரூ 300 தரிசன டிக்கெட்டுகள் புக்கிங் தொடங்குகின்றன. அதில் ஒரு அக்கவுன்ட்டில் 6 டிக்கெட்டுகள் வரை புக்கிங் செய்யலாம். அது போல் எக்ஸ்ட்ரா லட்டு வேண்டுமானாலும் தனியே பணம் செலுத்திக் கொள்ளலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆதார் கார்டு, பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் ஒன்றை ஆவணமாக கொண்டு டிக்கெட் புக் செய்ய வேண்டும். அறைகளை புக் செய்ய அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு புக்கிங் ஸ்லாட் திறக்கப்படும். அதில் புக் செய்துக் கொள்ளலாம். ரூ 300 தரிசனத்திற்கும் அறை புக்கிங்கிற்கும் ஹை ஸ்பீடு இன்டர்நெட் இருந்தால்தான் புக் செய்ய முடியும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications