நிறைய ஆண் நண்பர்கள்.. டிக் டாக் மோகம்.. பாத்திமாவின் மண்டையை கட்டையால் அடித்து கொன்ற கணவர்

டிக்டாக் செய்த மனைவியை கணவன் கொலை செய்தார்.

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: சொல்லி சொல்லி கேக்கல.. பாத்திமா மண்டையில் நச்சென உருட்டுக் கட்டையால் போட்டு தள்ளிவிட்டார் கணவன்! எல்லாம் டிக்டாக் மோகத்தினால் வந்த விளைவுதான்!

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்திலுள்ள தல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பாச்சூ. இவர் ஒரு டெய்லர். பாத்திமா என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர்.

husband kills wife over tik tok videos

ஆனால், பாத்திமாவுக்கு டிக் டாக் செய்வது என்றால் உயிர்.. பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு, எப்ப பார்த்தாலும் டிக் டாக் செய்து வீடியோ எடுப்பார். இவர் வீட்டுக்கு பக்கத்திலேயே வயல், தோட்டம் இருக்கவும், ஓடியாடி, பாடியாடி.. என வீடியோ எடுத்து வெளியிட்டு வந்துள்ளார்.

பாத்திமா டிக் டாக் வீடியோவில் வெறித்தனமாக மூழ்கியிருப்பது கணவனுக்கு பிடிக்கவில்லை. அதனால் பலமுறை கண்டித்தும் இருக்கிறார். ஆனால் பாத்திமா பிடிவாதத்தை எதுவும் செய்ய முடியவில்லை. எந்நேரமும் வீடியோவிலேயே மூழ்கியிருப்பதால், கணவனுக்கு சந்தேகமும் எழுந்திருக்கிறது. இது சம்பந்தமாக இருவருக்கும் தகராறும் நடந்துள்ளது. ஒரு கட்டத்தில் தனது தோழியுடன் நடு ரோட்டில் நின்று டிக் டாக் செய்து பதிவிட்டதால் பிரச்சனை அதிகமாகிவிட்டது.

இந்த நிலையில் சம்பவத்தன்று காலை பாத்திமா தூக்குல தொங்குவதா கணவன் சத்தம்போடவும் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்துவிட்டனர். தகவலறிந்து போலீசாரும் வந்து விசாரணையை தொடங்கினர். அப்போதுதான், பாத்திமாவின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது தெரிந்தது.

விசாரணையில், டிக் டாக் மூலம் அறிமுகமான சில ஆண் நண்பர்களுடன் நெருக்கமான நட்பு பாத்திமாவுக்கு உள்ளதாகவும், அது தெரிந்து தாம் எச்சரித்தும் நண்பர்களுடன் பொழுதை கழித்ததால், இப்படி கழுத்தை நெரித்து கொன்று தூக்கில் தொடங்கவிட்டதாகவும், கணவன் ஒப்புக் கொண்டார். இப்போது அவர் கைதாகி உள்ளார். இவர்களின் 2 பிஞ்சுகளும் நிர்க்கதியாக நிற்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+