திருப்பதி லோகநாதன்.. எஸ்பிஐ வங்கி, தங்க பத்திரம், 2 கிலோ நகை.. கோழி அமுக்குவது போல அமுக்கிய ஆபீசர்ஸ்

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் நிர்வாகத்தில் மீண்டும் ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோயில் அதிகாரி லோகநாதன் வசமாக மாட்டிக் கொண்டிருக்கிறார்.. வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக இவர் மீது புகார் போயிருக்கிறது.. உடனே லோகநாதனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனைகளை ஆரம்பித்து விட்டார்கள்.. நெல்லூர் லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் வழங்கிய வாரண்டின் அடிப்படையிலேயே இந்த ரெயிடு நடந்துள்ளது மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது. யார் இந்த லோகநாதன்?

கடந்த சில நாட்களுக்கு முன்புதான், திருமலை நெய் கலப்பட விவகாரம் தொடர்பாக சர்ச்சை ஒன்று கிளம்பியது.. எனவே இதுகுறித்து சிபிஐ மற்றும் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தி வந்தனர்.

Tirupati Lokanathan Raid

சிக்கிய திருப்பதி லோகநாதன்

அந்த விசாரணையின்போது, கோயிலின் துணை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வரும் மெண்டு லோகநாதன் என்பவரது பெயர் அடிபட்டது.. இவர் மீது வந்த புகார்கள் மற்றும் கிடைத்த முக்கிய தகவல்களின் அடிப்படையில் லோகநாதன் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் சீனிவாசராவ் தலைமையில் தனிப்படைப் போலீசார் இந்த சோதனையைத் தொடங்கினர். திருப்பதியில் உள்ள லோகநாதனின் வீடு, திருமலையில் உள்ள அவரது ஆபீஸ், எற்பேடு மண்டலம் குண்டல கந்திரிகாவில் உள்ள அவரது தம்பி வேணுவின் வீடு, மைத்துனர்கள் முனிகிருஷ்ணா மற்றும் ரமேஷ் ஆகியோரின் வீடுகள், மற்றும் பெங்களூரில் உள்ள சொத்துக்கள் என ஏகப்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடந்துள்ளது. அதுமட்டுமல்ல, திருப்பதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் இருந்த லோகநாதன் வங்கி லாக்கர்களும் சோதிக்கப்பட்டன.

சொத்து ஆவணங்கள், 10 ஏக்கர் நிலம்

சோதனையின் முடிவில் ஏராளமான சொத்து ஆவணங்கள் சிக்கியுள்ளன. லோகநாதனின் மனைவி பெயரில் பெத்தகபு லே அவுட்டில் ஒரு வீடு மற்றும் கொல்லவானிகுண்டாவில் 2 பிளாட்கள், அவரது மகன் பெயரில் திருப்பதி நகரில் ஒரு வீட்டு மனை மற்றும் ஸ்ரீனிவாச நகரில் உள்ள சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

தம்பி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது 10 ஏக்கர் விவசாய நிலம் மற்றும் குடும்பத்தினர் பெயரில் வாங்கியுள்ள சொத்துக்களுக்கான ஆவணங்கள் சிக்கியுள்ளன. அதேபோல லோகநாதனின் பெயரிலும் அவரது மகன் பெயரிலும் 4 வங்கி நிலையான வைப்புத் தொகைகளும் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர, அவரது மைத்துனர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையின்போது கணக்கில் காட்டப்படாத பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

எஸ்பிஐ வங்கி, தங்கப் பத்திரம்

முக்கியமாக, அங்கு வைக்கப்பட்டிருந்த 2 கிலோ தங்கம் (இதில் 1.42 கிலோ எடையுள்ள தங்கப் பாத்திரம் ஒன்று அடங்கும்), 6 கிலோவுக்கும் அதிகமான வெள்ளிப் பொருட்கள் மற்றும் 12 லட்சத்திற்கும் அதிகமான ரொக்கப் பணம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இவைகளின் மொத்த மதிப்பு 5 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்று முதற்கட்டமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சோதனைகள் அத்தனையும், நீதிமன்றத்தின் வாரண்டு மற்றும் முறையான வழக்குப் பதிவின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகளும் விளக்கம் அளித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதால் மேலும் பல உண்மைகள் வெளிவர வாய்ப்புள்ளது.

மெண்டு லோகநாதன் கடந்த 1989ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி அன்று கருணை அடிப்படையில் தேவஸ்தானத்தில் ஜூனியர் அசிஸ்டெண்டாக வேலைக்கு சேர்ந்தவராம். பிறகு படிப்படியாக உயர்ந்து சீனியர் அசிஸ்டெண்ட், சூப்பிரண்டு, உதவி நிர்வாக அதிகாரி எனப் பதவிகளை வகித்து இப்போது துணை நிர்வாக அதிகாரியாக உயர்ந்துள்ளார்.

கோழி அமுக்குவது போல அமுக்கிய அதிகாரிகள்

ஒரு சாதாரண ஊழியராக வேலைக்கு சேர்ந்து, இப்போது துணை நிர்வாக அதிகாரி வரை உயர்ந்தவர், எப்படி இவ்வளவு சொத்துக்களை சேர்த்தார் என்று ஆந்திர பிரதேசமே ஆடிப்போயிருக்கிறது.. அத்தனை சொத்துக்கள் தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.

லோகநாதன் மீது தொடர்ந்து லஞ்ச புகார்கள் வந்தாலும், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இதுகுறித்து உடனே அவசரப்படவில்லை... அதேசமயம், அவரை கண்காணித்தும் வந்தனர்.. நேற்றைய தினம் லோகநாதன் வீட்டில் இருக்கிறார் என்பதை உறுதி செய்து கொண்டு, அதன்பிறகே அதிகாரிகள் அதிகாலையில் லோகநாதன் வீட்டை சூழ்ந்தனர்..

இப்படித்தான், தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டியின் உதவியாளர் மீது இதேபோன்று வழக்குப்பதிவு ஏற்கனவே செய்யப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+