திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இங்க உழைச்சா சாமானியருக்கும் அங்கீகாரம்.. அவர் கோபாலபுரத்தில் பிறந்திருக்க வேண்டியதில்லை.. அண்ணாமலை

Google Oneindia Tamil News

திருப்பூர்: 2026ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும். 150 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் பாஜக செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தேசிய தலைவர் ஜே பி நட்டா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல் முருகன், முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களும் வாபஸ்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்.. விவசாயிகள் ஹேப்பிசர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களும் வாபஸ்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்.. விவசாயிகள் ஹேப்பி

இந்த கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை பேசுகையில் 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் 150 -க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெல்லும். நிச்சயம் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும்.

சாமானியன்

சாமானியன்

பாஜகவில் மட்டும் தான் சாமானியன் எங்கே இருந்தாலும் கண்டுபிடித்து அலங்காரம் கொடுப்போம். இதற்காக கோபாலபுரத்தில் நீங்கள் பிறந்திருக்க வேண்டும், ஒரே குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் போராட்டங்களால் தமிழக அரசின் முடிவுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன என்றார் அண்ணாமலை.

தமிழகத்தின் வளர்ச்சி

தமிழகத்தின் வளர்ச்சி

அது போல் பாஜக தலைவர் ஜேபி நட்டா கூறுகையில் தமிழகத்தின் வளர்ச்சிக்கும் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் தமிழ் கலாச்சாரத்திற்கும் பாஜக என்றும் துணை நிற்கும். வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுவது தான் பாஜகவின் இலக்கு என பேசியுள்ளார்.

அதிமுகவுடன் பாஜக கூட்டணி

அதிமுகவுடன் பாஜக கூட்டணி

கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தது. இந்த தேர்தலில் பாஜக ஒரு இடங்களில் கூட வெல்லவில்லை. அது போல் அதிமுக ஒரே ஒரு இடத்தில் வென்றது. அது போல் தமிழக சட்டசபை தேர்தலிலும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தது. இதில் பாஜக 20 இடங்களில் போட்டியிட்டு வெறும் 4 இடங்களில் வென்றது. இது முன்னாள் தலைவர் எல் முருகனின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

அண்ணாமலை

அண்ணாமலை

தற்போது புதிதாக வந்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்கெனவே தமிழகத்திலிருந்து சட்டசபை, நாடாளுமன்றம், உள்ளாட்சி மன்றங்களுக்கு பாஜக பிரதிநிதிகளை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில்தான் அவர் தமிழகத்தில் அடுத்தது பாஜக ஆட்சி அமையும் என உறுதியாக தெரிவித்துள்ளார். இன்னும் உள்ள நான்கரை ஆண்டுகளில் அதற்கான முயற்சிகளில் பாஜக ஈடுபடும் என தெரிகிறது.

English summary
Annamalai says Gopalapuram house in his Tiruppur speech
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X