விஜய் கேஸை விசாரித்த குஜராத் சிபிஐ தலை.. சீல் வைத்த பைலில் பறந்த ரிப்போர்ட்.. ஆட்டமே தலைகீழாகுது!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: கரூரில் நடிகர் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் (TVK) நிறுவனர் விஜய்யின் அரசியல் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணையை தீவிரமாக நடத்தி வருகிறது. இந்த முதல் கட்ட விசாரணையின் அறிக்கையை சிபிஐ குழு வியாழக்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

சீல் வைக்கப்பட்ட பைல் ஒன்றில் இந்த ரிப்போர்ட்டை சிபிஐ கோர்ட்டில் தாக்கல் செய்து உள்ளது. விரைவில் இந்த சீல் இடைப்பட்ட ரிப்போர்ட் முன்னாள் நீதிபதி ரஸ்தோகி மூலம் ஆய்வு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TVK Vijay

கரூர் வழக்கு - விஜய் சிபிஐ

கரூரில் நடைபெற்ற இந்த கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து, மாநிலம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழு (SIT), ஐஜிபி அஸ்ரா கார்க் தலைமையில் விசாரித்து வந்தது. இருப்பினும், அக்டோபர் 13 அன்று உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றியது.

இதையடுத்து, குஜராத்தைச் சேர்ந்த எஸ்பி பிரவீன் குமார் தலைமையிலான ஆறு பேர் கொண்ட சிபிஐ குழு, கூடுதல் எஸ்பி முகேஷ் குமார் மற்றும் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் ஆகியோருடன் கரூர் வந்து விசாரணையைத் தொடங்கியது. சிறப்பு புலனாய்வு குழு வழக்கு ஆவணங்களை சிபிஐ குழுவிடம் ஒப்படைத்த பிறகு இந்த விசாரணை ஆரம்பித்தது.

சிபிஐ குழு முதலில் வேலாயுதம்பாளையம் பகுதியில் சம்பவ இடம் மற்றும் பிற இடங்களை பார்வையிட்டது. தீபாவளி விடுமுறை காரணமாக சில நாட்கள் ஒத்திவைக்கப்பட்ட விசாரணை, அதிகாரிகள் புதன்கிழமை இரவு கரூர் திரும்பியதும் மீண்டும் தொடங்கியது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, ஏற்கனவே நியமிக்கப்பட்ட அதிகாரிகளுடன், எல்லைப் பாதுகாப்புப் படையின் ஐஜி சுமித் சரண் மற்றும் சிஆர்பிஎஃப் ஐபிஎஸ் அதிகாரி சோனல் மிஸ்ரா ஆகியோரும் இந்த குழுவில் இணைந்தனர்.

எட்டு நாட்கள் விசாரணை மேற்கொண்ட எஸ்பி பிரவீன் குமார் தலைமையிலான குழு, கரூர் ஜூடிஷியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் II மற்றும் மாஜிஸ்திரேட் எம். சார்லஸ் ஆல்பர்ட் முன்னிலையில் வியாழக்கிழமை காலை 11 மணியளவில் முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்தது.

"கட்டாய நடைமுறையின்படி நீதிமன்றத்தில் அறிக்கையை சமர்ப்பித்துள்ளோம், என குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.

யார் இந்த முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி

முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி 1958ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி பிறந்தார். ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் புகழ்பெற்ற சிவில் வழக்கறிஞராக இருந்த அவரது தந்தை ஹரிஷ் சந்திர ரஸ்தோகியின் வழியில், 1982ஆம் ஆண்டு சட்டத்துறையில் தனது பயணத்தைத் தொடங்கினார்.

வழக்கறிஞராக, நீதிபதி ரஸ்தோகி பல சட்டப் பிரிவுகளில் பணியாற்றினார். அதே சமயம், அவர் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சேவைச் சட்டங்களில் முக்கிய கவனம் செலுத்தினார். 1990ஆம் ஆண்டு, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் நிரந்தர வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட அவர், 2004ஆம் ஆண்டு வரை அப்பதவியில் நீடித்தார். 1999 முதல் 2000 வரை ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.

ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு, 2013ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி முதல் 2016ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி வரை மாநில சட்ட சேவை ஆணையத்தின் நிர்வாகத் தலைவராகப் பணியாற்றினார். அவரது தலைமையின் கீழ், இந்த ஆணையம் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்திடமிருந்து மூன்று ஆண்டுகள் தொடர்ந்து தேசிய விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

முக்கிய தீர்ப்புகளை வழங்கிய சஞ்சய் ரஸ்தோகி

2014ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் நிர்வாக நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், 2018ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி திரிபுரா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். இந்த பதவி உயர்வு வரை அவர் அப்பதவியில் நீடித்தார். முன்னதாக, 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி முதல் 2016ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி வரை ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தற்காலிகத் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார்.

நீதிபதி அஜய் ரஸ்தோகி 2018ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். நீதிபதியாக பல முக்கிய தீர்ப்புகளை வழங்கி உள்ளார். பெண் நேவி ஊழியர்களுக்கு கட்டாய கமிஷன், ஐஏஎஸ் தேர்விற்கான வயது வரம்பை நீக்க முடியாது, அங்கன்வாடி ஊழியர்களுக்கு கிராஜுவிட்டி வழங்கலாம் என்பது உள்ளிட்ட பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+