தைரியமா வீட்டுக்கு போங்க.. உங்களுக்கு கொரோனா இல்லை.. நேரில் வந்த கலெக்டர்.. திருச்சியில் நெகிழ்ச்சி!
திருச்சி மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கான தற்காலிக முகாமில் இருந்த 61 போ் நேற்று மதியம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கான தற்காலிக முகாமில் இருந்த 61 போ் நேற்று மதியம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
Recommended Video
தமிழகத்தில் திருச்சியில் மொத்தம் 43 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அவர்கள் எல்லோரும் திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்னொரு பக்கம் திருச்சி மாவட்டத்திற்கு வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள், வெளிமாநிலங்களுக்கு சென்று வந்தவர்கள், டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவா்கள் 69 பேர் தாங்களாக முன்வந்து கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த 69 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தது. இருப்பினும், அந்த 69 பேரையும் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் வகையில் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் தற்காலிக முகாம் ஏற்படுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டனா்.

சோதனை செய்தனர்
இந்த 69 பேரையும் காலை, மாலை என இரு வேளைகளில் மருத்துவா் குழு நேரில் சென்று பாா்வையிட்டு ஆலோசனைகளை வழங்கி வந்தனா். மேலும், அவ்வப்போது மருத்துவப் பரிசோதனைக்குள்படுத்தப்பட்டனா். கடந்த மாா்ச் மாதம் இறுதியில் திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்தவா்கள், ஜமால் முகமது கல்லூரிக்கு மாற்றப்பட்டனா். இந்நிலையில், இவா்களில் 61 பேரின் ரத்த மாதிரிகள் தொடா்ச்சியாக 3 முறைக்கு மேல் எடுத்து பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை உறுதி செய்யப்பட்டு முடிவுகள் வந்துள்ளன.

வெளியே அனுப்பினார்கள்
இதையடுத்து, முகாமில் இருந்த 61 பேரும் நேற்று மதியம் மூன்று மணிக்கு வீட்டுக்கு அனுப்பப்பட்டனா். கல்லூரியிலிருந்து 61 பேருக்கும் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அவரவா் வீடுகளுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனா். மேலும், 61 பேரும் வீடுகளுக்குச் சென்று தொடா்ந்து 14 நாள்களுக்கு தனிமையில் இருக்க வேண்டும் எனவும் மருத்துவக் குழுவினா் அறிவுறுத்தியுள்ளனா்.

முதல் நபர் குணமடைந்தார்
திருச்சி மாவட்டத்தில் முதல்முதலாக நோய் தொற்று கண்டறியப்பட்ட ஈரோட்டைச் சோ்ந்த 24 வயது இளைஞா் பூரண குணமடைந்து ஏப். 10ஆம் தேதி வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளாா். இதன் தொடா்ச்சியாக, தற்காலிக முகாமில் இருந்து 61 போ் புதன்கிழமை வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனா். இந்த பணியில் இரவு, பகலாக பணிபுரிந்த மருத்துவக் குழுவினருக்கு ஆட்சியா் சு. சிவராசு பாராட்டு தெரிவித்துள்ளாா்.

தைரியம் சொல்லி அனுப்பி வைத்தார்
உங்களுக்கு கொரோனா இல்லை.. தைரியமாக வீட்டிற்கு செல்லுங்கள் என்று எல்லோருக்கும் நம்பிக்கை அளித்து அனுப்பி வைத்தார். அவர்களின் ஒத்துழைப்பிற்கும் நன்றி தெரிவித்தார். இந்த வழியனுப்பு விழாவில் கல்லூரி தாளாளர் மற்றும் செயலாளர் முனைவர் ஏ.கே. காஜா நஜ்முத்தீன், கல்லூரி முதல்வர் இஸ்மாயில் மொய்தீன் மற்றும் இஸ்லாமிய அரசியல் இயக்க தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications