வேதாளம் முருங்கை மரம் ஏறியது.. எந்த கொம்பனாலும் தொட்டுப் பார்க்க முடியாது! எகிறிய எடப்பாடி பழனிசாமி!
திருச்சி : சிலர் வேண்டுமென்றே திமுகவுடன் கூட்டணி அமைத்து அதிமுகவை எதிர்க்கபார்க்கிறார்கள் அது ஒரு போதும் நடக்காது எனவும், எந்த கொம்பனாலும் அதிமுகவை தொட்டு பார்க்க முடியாது என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
திருச்சி கலையரங்கம் மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி இல்ல திருமண விழா வரவேற்பு நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வருகை தந்தார்.
திருச்சி விமான நிலையத்திற்கு 11 மணியளவில் வருகை தந்த அவர் விமான நிலையம் அருகே உள்ள வயர்லெஸ் சாலையில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் தொண்டர்கள் மத்தியில் உரை ஆற்றினார்.

அதிமுக
நிகழ்ச்சியில் பேசிய அவர்," எந்த கொம்பனாலும் அதிமுகவை தொட்டு பார்க்க முடியாது. சிலர் வேண்டுமென்றே திமுகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக எதிர்க்கபார்க்கிறார்கள் அது ஒரு போதும் நடக்காது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியுடன் நான் உங்களுடன் பயணிக்கிறேன். சிலரிடம் 10 % பொதுக்குழு உறுப்பினர்கள்,11 சட்டமன்ற உறுப்பினர்கள் தான் இருந்தார்கள்.

மீண்டும் வேதாளம்
உங்கள் விருப்பப்படி சேர்த்தோம். ஆனால் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது. நம்பிக்கையில்லா தீர்மானம் வந்த போது எதிர்த்து வாக்களித்தார் தான் அவர். இவர் அம்மா விசுவாசி என்கிறார். நான் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். நான் தான் ஜெயலலிதாவிற்க்கு விசுவாசமாக இருந்தேன்.

எப்படி விசுவாசி?
அவர் எதிர் தரப்பில் நின்றார். அவர் எப்படி விசுவாசி என்கிறார். அதிமுக அலுவலத்தை உடைத்தவர். இவரை எப்படி இணைக்க முடியும். அவர் முன்னிலையில் இருந்து செய்கிறார். நான் கட்சியை உயர்வாக நினைக்கிறேன்.அவர்கள் வியாபாரமாக நினைக்கிறார்கள். இவரை போல எத்தனை பேர் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது." என ஆவேசமாகப் பேசினார்.

கடும் விமர்சனம்
அதிமுகவில் தற்போதைய சூழ்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருடன் இணைந்து பயணிக்க தயார் என ஓ பன்னீர்செல்வம் வெளிப்படையாக கூறினாலும் அதனை வெளிப்படையாகவே மறுத்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. தற்போது இணைந்தாலும் பிற்காலத்தில் மீண்டும் ஓ பன்னீர்செல்வம் தனக்கு நெருக்கடி தருவார் அதைவிட தற்போது இருந்தே நேரடியாகவே எதிர்த்து அரசியல் செய்ய தீர்மானித்திருக்கிறார். இதன் காரணமாகவே கடந்த சில நாட்களாக அவர் பொதுவெளியில் மிக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications