மணப்பாறை வேப்பிலை மாரியம்மனுக்கு பால்குடம்... வேகமாக வந்த ஆம்புலன்ஸ் - வழிவிட்ட பக்தர்கள்
மணப்பாறையில் வேப்பிலை மாரியம்மன் கோவில் பால்குட உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
திருச்சி: மணப்பாறையில் உள்ள வேப்பிலை மாரியம்மனுக்கு 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து 3 லட்சம் லிட்டர் பாலினால் அபிஷேகம் செய்தனர். பக்தர்கள் வெள்ளத்திற்கு இடையே ஆம்புலன்ஸ் எந்தவித இடையூறுமின்றி சென்றது அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. ஆம்புலன்சுக்கு பக்தர்கள் வழிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் சுமார் ஐநூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த அருள்மிகு வேப்பிலை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பொது முடக்கத்தால் திருவிழா நடைபெறவில்லை.
இந்நிலையில், நிகழாண்டு நடைபெறும் சித்திரைத் திருவிழாவில் சிறப்பு வாய்ந்த பால்குடவிழா ஞாயிற்றுக்கிழமை வெகுவிமர்ச்சையாக நடைபெற்றது. அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 1ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தினரின் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு அலங்காரங்களில் அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது.

பூச்சொரிதல் விழா
கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கிய திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகளின் ஒன்றான பால்குட விழா நேற்று காலை தொடங்கியது. இதில் மாரியம்மன் கோவிலின் பின்புறமுள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னர் பால்குட ஊர்வலம் தொடங்கியது.

பால்குட ஊர்வலம்
ஞாயிற்றுக்கிழமை அருள்மிகு வரதராஜபெருமாள் கோயிலில் இருந்து பாலுசாமி நாயுடு மற்றும் நல்லுச்சாமி நாயுடு வகையறா மண்டகப்படியின்படி, கோயில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வீ.எஸ்.வீரமணி தலைமையில் ஆலய பால்குடங்கள் புறப்பட்டு மயிலாட்டம், ஒயிலாட்டத்துடன் மேளதாளங்கள், நாதஸ்வரம் முழங்க ராஜவீதிகளின் வழியாக சென்ற அம்மன் ஆலயத்தை வந்தடைந்தது.

25 ஆயிரம் பக்தர்கள் பால்குடம்
அதனைத்தொடர்ந்து மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்கள் சுமந்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அதேபோல் குழந்தை வரம்வேண்டியவர்கள் குழந்தை பாக்கியம் அடைந்ததால் கரும்புத்தொட்டில் கட்டிவந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

3 லட்சம் லிட்டர் பாலபிஷேகம்
நேற்று காலை 6 மணிக்கு தொடங்கிய பால்குட ஊர்வலம் மாலை வரை நடைபெற்றது. அனைத்து பால்குடங்களும் கோவிலுக்கு வந்தடைந்தபின் சுமார் 3 லட்சம் லிட்டர் பாலால் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பால்குடத்தை சுமந்து கொண்டு பக்தி பரவசத்துடன் ராஜவீதிகளின் வழியாக மாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர். இதையடுத்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.

பக்தர்களுக்கு அன்னதானம்
இதையடுத்து கோவில் பரம்பரை அறங்காவலர்களை பாராம்பரிய முறைப்படி அழைத்துச்செல்ல, அதைத் தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பக்தர்கள் செல்லும் பகுதியில் பலரும் பக்தர்கள் மீது தண்ணீர் ஊற்றினர். மேலும் பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு நீர்மோர், அன்னதானம் போன்றவற்றை பொதுமக்கள் வழங்கினர். நிகழ்ச்சியை ஆசிரியர் திருவாச நல்லுசாமி தொகுத்து வழங்கினார். முன்னதாக பக்தர்கள் பால்குடம் எடுத்து செல்வதற்கு முறையாக தடுப்புகள் அமைக்கப்பட்டு, இடையூறின்றி ராஜ வீதிகளில் செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கோவில் செயல் அலுவலர் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் தலைமையில் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதேபோல் மணப்பாறை நகராட்சி சார்பில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டிருந்தது. மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமநாதன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் தொடங்கி நடைபெற்று வருவதால், மணப்பாறை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

சாரல் மழையில் பால்குட ஊர்வலம்
மணப்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் நேற்று லேசான சாரல் மழை பெய்தது. மேலும் பால்குட விழா நடைபெறும் நிலையில் வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருக்குமோ? என்று பொதுமக்கள் எண்ணிய நிலையில், நேற்று வெப்பத்தின் தாக்கமின்றி வானம் மேகமூட்டமாக காட்சி அளித்ததுடன், குளிர்ந்த காற்றும் வீசியது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்ததுடன் வெப்பத்திற்கு விடைகொடுத்து குளிர்ந்த சூழ்நிலை ஏற்படுத்திய வேப்பிலை மாரிக்கும், வருணபகவானுக்கும் நன்றி தெரிவித்தனர். பால்குட விழா முடிந்ததும் மீண்டும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்ட பக்தர்கள்
பால்குட விழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்ததால், சாலையில் வழியே இல்லாத நிலையில் பக்தர்கள் கூட்டம் நிறைந்திருந்தது. இந்நிலையில் கோவில்பட்டி சாலையில் ஆம்புலன்ஸ் ஒன்று அவசர தேவைக்காக சென்றது. அதைப்பார்த்த பக்தர்கள் சில வினாடிகளில் ஒதுங்கிக் கொண்டு ஆம்புலன்சிற்கு வழிவிட்டனர். இதனால் பக்தர்கள் வெள்ளத்திற்கு இடையே ஆம்புலன்ஸ் எந்தவித இடையூறுமின்றி சென்றது அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. ஆம்புலன்சுக்கு பக்தர்கள் வழிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

காப்புக்கட்டி விரதம்
சித்திரை திருவிழாவில் பால்குட விழாவிற்கு காப்பு கட்டி, விரதம் இருந்த பக்தர்கள், பயபக்தியுடன் பால்குடம் எடுத்து வேப்பிலை மாரியம்மன் கோவிலை வந்தடைந்ததும், பாலாபிஷேகம் செய்த பின்னர் தங்களின் காப்புகளை அவிழ்த்துவிட்டு செல்வார்கள். அதன்படி நேற்று பக்தர்கள் காப்புகளை அவிழ்க்க மணப்பாறை இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் உதவி செய்தது காண்போரை நெகிழ வைத்தது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications