திருச்சியில் உள்ள சர்ச்சில் திடீரென முட்டி போட்டு நடந்தபடி பிரார்த்தனை செய்த விஜய்.. பின்னணி என்ன?
திருச்சி: திருச்சி வயர்லெஸ் சாலையில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் தவெக தலைவர் விஜய் முட்டிப் போட்டு வந்து பிரார்த்தனை மேற்கொண்டிருக்கிறார். திருச்சி கிழக்கு தொகுதியில் சிறுபான்மை சமூக மக்கள் அதிகளவில் இருந்து வரும் சூழலில், விஜய் மீண்டும் தன்னை கிறிஸ்தவராக அடையாளப்படுத்தி கொண்டிருப்பதாக பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அத்தனை கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் விஜய் கடந்த 4 நாட்களாகவே பிரச்சாரம் எதுவும் செய்யாமல் வீட்டிலேயே ஓய்வில் இருந்தார். தவெக தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின் பெரம்பூர் தொகுதியில் உள்ள தேர்தல் அலுவலகத்தை மட்டும் பார்வையிட்டு விசில் கோலம் போட்டார்.

இதன்பின் அடுத்த நாள் காலையில் பெரம்பூர் தொகுதியில் விஜய் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அந்த பிரச்சாரத்தையும் விஜய் ரத்து செய்தார். அதேபோல் கடலூர் செல்லவிருந்த திட்டத்தையும் கைவிட்டார். தர்மபுரியில் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி கிடைக்கவில்லை என்று பிரச்சாரத்தை ரத்து செய்தார்.
இந்த சூழலில் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் ரோடு ஷோ நடத்தி இருக்கிறார். இதற்காக காலையிலேயே சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக புறப்பட்ட விஜய், திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். இதன்பின் திருச்சி கிழக்கு தொகுதியில் இருந்த வயர்லெஸ் சாலையில் இருக்கும் புனித அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார்.
அந்த தேவாலயத்தில் விஜய் முட்டிப் போட்டு வந்து பிரார்த்தனையில் ஈடுபட்ட வீடியோ சோசியல் மீடியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக விஜய் மீண்டும் தான் ஒரு கிறிஸ்தவர் என்ற அடையாளத்தை வெளிப்படுத்தி இருப்பதாக பார்க்கப்படுகிறது. திருச்சி கிழக்கு தொகுதியில் சுமார் 35% வாக்காளர்கள் கிறிஸ்தவர்கள் தான்.
இதன் காரணமாகவே விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட முடிவு எடுத்தார். ஏற்கனவே திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தற்போது 2வது முறையாக ரோடு ஷோ சென்றதோடு, தேவாலயத்திலும் பிரார்த்தனை செய்திருக்கிறார். இன்று காலை கிறித்துவ ஆயர்கள் முதலமைச்சரை சந்தித்து திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
அதேபோல் தேவாலயங்களில் திமுக கூட்டணிக்கு ஆதரவளிக்க நோட்டீஸ் வழங்கப்பட்டது. இப்படியான சூழலில் சிறுபான்மையினர் வாக்குகளை பெற விஜய் முயற்சிப்பதாக பார்க்கப்படுகிறது. விஜய்யின் இந்த செயல் தவெகவுக்கு பலன் கொடுக்குமா என்பதை மே 4ஆம் தேதி தேர்தல் முடிவு வெளியிடும் போதுதான் தெரிய வரும்.
-
விஜய்யின் பெயரை கூட தவறாக சொன்ன கர்நாடகா அமைச்சர்.. இப்படி செய்வாருனு யாரும் எதிர்பார்க்கலை -
எம்ஜிஆர் பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வெள்ளி வாள் வழங்கி தரிசனம் -
எம்ஜிஆர், ஜெயலலிதா போலவே விஜய்யும்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் என்ன ஸ்பெஷல்? -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
"புரோட்டோகால் முக்கியம்!" சிங்கப்பெண் உடையில் கிண்டல் செய்த கூல் சுரேஷ்.. வலுக்கும் கண்டனம் -
1.5 டிரில்லியன் டாலர் இலக்கு.. ஸ்டாலின் வைத்த டார்கெட்டை உயர்த்திய விஜய்.. மோடியிடம் சொன்னது என்ன? -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
ஜூன் 15-ல் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை வருமா? விஜய் போட்ட பிளான்.. பலருக்கும் போன மெசேஜ் உண்மையா? -
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. ஜூன் 15ல் நீதிமன்றத்தில் விசாரணை.. அடுத்தது என்ன? -
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: மீண்டும் சூடுபிடிக்கும் சிபிஐ விசாரணை.. 10 போலீசாருக்கு சம்மன் -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்!












Click it and Unblock the Notifications