திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வந்தே பாரத் திட்டம் மூலம் திருச்சிக்கு 18,135 பேர் வருகை - தனிமை முகாம்களில் 17 ஆயிரம் பேர்

Google Oneindia Tamil News

திருச்சி: வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்திருக்கும் 18,135 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமை முகாம்களில் தங்குவதற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனோ வைரஸ் பாதிப்பினால் அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக தாயகம் வரமுடியாமல் சிக்கியிருந்த இந்தியர்களை வந்தே பாரத் திட்டம் மூலம் மத்திய அரசு மீட்டு வருகிறது. கடந்த மாதம் 6ஆம் தேதி முதல் சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது.
நான்கு கட்டங்களாக சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு அதன் மூலம் பயணிகள் அழைத்து வரப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் சுமார் 4 லட்சம் இந்தியர்கள் தாய்நாடு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Vande Bharat Mission 18,135 passengers arrived in Trichy Airport

அந்த வகையில் திருச்சி விமான நிலையத்திற்கு மார்ச் மாதம் தொடங்கி ஜூன் 29ஆம் தேதி வரையில் 18 ஆயிரத்து 135 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர். அழைத்துவரப்பட்ட பயணிகள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களில் சுமார் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தமிழகத்தின் பல்வேறு மாவட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை தனிமைப்படுத்தும் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதில், ஞாயிற்றுக்கிழமை திருச்சி வந்த சார்ஜா விமானத்தில் 161 பேரும் குவைத் விமானத்தில் 162 பேரும் என மொத்தம் 323 பயணிகள் திருச்சி வந்து சேர்ந்தனர். குவைத்தில் இருந்து வந்த விமானம் பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் குவைத் திரும்புகையில் சுமார் 6 ஆயிரத்து 450 கிலோ எடையுள்ள காய்கறிகள் உணவுப் பொருள்கள் மற்றும் மலர்கள் ஆகியவற்றை ஏற்றிச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் சுமார் 4 லட்சம் இந்தியர்கள் தாய்நாடு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 வனிதா எத்தனை கல்யாணம் செஞ்சா நமக்கென்ன.. தமிழ்நாடு இருக்கிற இருப்பில்.. அதுவா இப்ப ரொம்ப முக்கியம் வனிதா எத்தனை கல்யாணம் செஞ்சா நமக்கென்ன.. தமிழ்நாடு இருக்கிற இருப்பில்.. அதுவா இப்ப ரொம்ப முக்கியம்

வந்தே பாரத் திட்டத்தின் 4 ஆவது கட்டமாக 17 நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்துவர வரும் ஜூலை 3 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை 170 ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக மத்திய விமானப்போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, கென்யா, இலங்கை, பிலிப்பைன்ஸ், கிர்கிஸ்தான், சவுதி அரேபியா, பங்களாதேஷ், தாய்லாந்து, தென்னாப்பிரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, மியான்மர், ஜப்பான், உக்ரைன் மற்றும் வியட்நாம், உள்ளிட்ட நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் பயன்பெருவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
About 18,135 passengers arrive under Vande Bharat Mission at Trichy Airport from Foreign country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X