தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

#சாத்தான்குளம் சம்பவம் - பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கொடுங்க - ட்விட்டரில் கொதிப்பு

கோவில்பட்டி கிளைச்சிறையில் தந்தை மகன் உயிரிழந்ததற்கு மாநிலம் முழுவதும் பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பலரும் கொதிப்போடு பதிவிட்டு வருகின்ற

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் விசாரணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை மகன் இருவரும் கோவில்பட்டி சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். காவல்துறை இன்னமும் நமது நண்பனா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு உயர்நீதிமன்றத்தின் மீது இன்னமும் நம்பிக்கை உள்ளது என்று பதிவிட்டுள்ளார்

Recommended Video

    சாத்தாங்குளம் தந்தை மகனுக்கு நடந்தது என்ன? ஜெயராஜ் மனைவி கதறல்

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவர், அங்குள்ள காமராஜர் சிலை அருகில் செல்போன் விற்பனைக்கடை நடத்தி வந்தார். கொரோனா வைரஸ் பரவி வருவதால் கடைகள் திறக்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த 19 தேதி, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டியும், கடையைத் திறந்து வைத்தது தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலைய போலீசாருக்கும் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ்சுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    காவல்துறையினர் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது இருவரையும் கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து மறுநாள் காலையில் கோவில்பட்டி கிளை சிறையில் காவல்துறையினர் அடைத்தனர். இதில் இருவருக்குமே நெஞ்சுவலி ஏற்பட்டதால் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி பென்னிக்ஸ் மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து நேற்று காலையில் தந்தை ஜெபராஜூம் மரணமடைந்தார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தந்தை, மகன் மரணத்திற்கு போராட்டம் வெடித்தது. தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்புக்கு வணிகர் சங்க பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
    சாத்தான்குளம் தந்தை, மகன் மரணத்திற்கு ட்விட்டரில் பலரும் தங்களின் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

    கோவில்பட்டி சிறையில் இருவர் மரணம்: வணிகர்கள் கடையடைப்பு - அரசு வேலை தர கோரிக்கை கோவில்பட்டி சிறையில் இருவர் மரணம்: வணிகர்கள் கடையடைப்பு - அரசு வேலை தர கோரிக்கை

    நம்ம ஊர்லயும் நடக்குதே

    அமெரிக்காவில் நடந்த ஜார்ஜ் ப்ளாய்ட் மரணத்தை பற்றிதான் எல்லோரும் பேசுவாங்க ஏன்னா அது அமெரிக்கா.... நாளைக்கு இந்த நிலைமை நமக்கு நடக்கதுன்னு என்ன உத்தரவாதம் என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஒரு நெட்டிசன்.

    தண்டனை என்ன

    அமெரிக்க போலீஸ்காரர் ஒருவர் அந்த நாட்டில் வசித்து வந்த கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவரை இனவெறி காரணமாக கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அங்கு கலவரத்தை ஏற்படுத்தியது. இதேபோல ஒரு சம்பவம் இங்கு நடந்துள்ளது. தமிழ்நாட்டில் இந்த மரணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை டிரான்ஸ்பர் செய்தால் மட்டும் போதாது டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

    முற்றுப்புள்ளி வையுங்கள்

    தூத்துக்குடி படுகொலை சம்பவத்தின் வடு இன்னும் மறையவில்லை. அதற்குள் சாத்தான்குளத்தில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார் ஒரு நெட்டிசன்.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி

    காவல்துறை உங்கள் நண்பன் என்று கூறுகிறார்கள், இன்னமும் காவல்துறை நமது நண்பனா? சாமானிய மக்களுக்கு சுதந்திரமாக நடமாட அனுமதி இல்லையா. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு உயர்நீதிமன்றத்தின் மீது இன்னமும் நம்பிக்கை உள்ளது என்று பதிவிட்டுள்ளார் ஒரு நெட்டிசன்.

    English summary
    People of Tamil Nadu till have hope on High Court... Justice For Their Family !!!!
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X