தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செம வெயிலு.. கூலிங் கிளாஸுடன் ஒட்டபிடாரத்தை வலம் வந்த ஸ்டாலின்.. ஜில் ஜில் பதநீர் அருந்தி பிரச்சாரம்

Google Oneindia Tamil News

ஓட்டப்பிடாரம்: நல்ல வெயில் போல.. கூலிங் கிளாஸை முக ஸ்டாலின் கழட்டவே இல்லை! பதநீரை குடித்து கொண்டே ஓட்டப்பிடாரத்தில் குளுகுளுவென பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

போன முறை தேர்தலில் திமுக தலைவர் முக ஸ்டாலின் நமக்கு நாமே கையில் எடுத்தார். நடந்து முடிந்த எம்பி தேர்தலில் கிராம சபை கூட்டத்தை முன் வைத்தார்.

இப்போது நடக்க போகும் இடைத்தேர்தலுக்கு திண்ணை பிரச்சாரத்தை நடத்தி வருகிறார்! ஒவ்வொரு ஸ்டைல் பிரச்சாரமும் ஸ்டாலினுக்கு பலன் தந்தே வருகிறது.

ராகுலை பிரதமர் வேட்பாளராக்கிய ஸ்டாலின் கேபினட் அமைச்சர் பதவிக்காக மோடியுடன் பேசி வருகிறார்.. தமிழிசைராகுலை பிரதமர் வேட்பாளராக்கிய ஸ்டாலின் கேபினட் அமைச்சர் பதவிக்காக மோடியுடன் பேசி வருகிறார்.. தமிழிசை

தங்கை கனிமொழி

தங்கை கனிமொழி

குறிப்பாக இப்போது நடத்தி வரும் திண்ணை பிரச்சாரம் மக்களை அதிக அளவு கவர்ந்துள்ளதாம். ஸ்டாலினும் வழக்கம்போல் செல்பி எடுத்து, தொகுதி மக்களிடம் இயல்பாக பேசி வருகிறார். இன்னைக்கு ஓட்டப்பிடாரம் பிரச்சாரத்தில் இறங்கி உள்ளார். கூடவே தங்கை கனிமொழியும் வந்துள்ளார்.

கலந்துரையாடல்

கலந்துரையாடல்

இவர்களுக்கு மக்கள் சால்வை கொடுத்து வரவேற்றனர். மரத்தடி நிழலில் ஒரு பென்ச் போட்டு ஸ்டாலின், கனிமொழி, கே.என்.நேரு, வேட்பாளர் சண்முகய்யா என வரிசையாக உட்கார்ந்துவிட்டார்கள். திரண்டு வந்திருந்த பொது மக்களிடம் கலந்துரையாடினார்கள்.

பதநீர்

பதநீர்

இதைதவிர, ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக சென்று மக்களை நேரடியாக சந்தித்து ஓட்டு கேட்டார். ரொம்ப வெயில் என்பதால், பெரும்பாலும் கூலிங் கிளாஸ் அணிந்தபடியேதான் இருந்தார் ஸ்டாலின். வர்ற வழியில் ஒருத்தர் பதநீர் வித்திட்டு இருந்தாரு.. இதை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் ஓடிப்போய் பதநீர் வாங்கி ஆசையுடன் தரவும், அதை வாங்கி குடித்தார் ஸ்டாலின்!

 கெத்து இல்லாத ஸ்டாலின்

கெத்து இல்லாத ஸ்டாலின்

எப்படியோ, ஓட்டப்பிடாரம் திண்ணை பிரச்சாரத்தில், எந்தவித கெத்து, பந்தா இல்லாமல் கேஷூவலாக பேசி வாக்கு கேட்டு வருகிறார்கள் கருணாநிதி பிள்ளைகள்!

English summary
DMK Leader MK Stalin, MP Kanimozhi campaing in Ottapidaram for by election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X