தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கட்டு கட்டாய் பணம்! அள்ளி கொடுத்த இசையமைப்பாளர் தேவா! திருச்செந்தூர் முருகன் கோவிலில் உருகி வழிபாடு!

Google Oneindia Tamil News

தூத்துக்குடி : தமிழ் துறையில் பிரபல இசை அமைப்பாளராக வலம் வந்த இசையமைப்பாலர் தேவா திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்ட நிலையில் தான் வெளியிட்ட 'கந்த முகமே' ஆல்பம் மூலம் கிடைத்த மொத்த தொகையையும் கோவிலுக்கு கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகில் உள்ள மாங்காடு கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர் தேவனேசன். இவர்தான் பிற்காலத்தில் தமிழ் திரையுலகில் பிரபல இசை அமைப்பாளராக வளம் வந்த இசையமைப்பாளர் தேவா.

1989 ஆம் வருடம் வெளியான மனசுக்கேத்த மகாராசா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு தற்போது வரை இசையமைத்துள்ளார்.

சூர்யாவுக்கு வாழ்த்து சொன்ன தேவா - சூப்பர் ஸ்டாருக்கு மம்முட்டி உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து சூர்யாவுக்கு வாழ்த்து சொன்ன தேவா - சூப்பர் ஸ்டாருக்கு மம்முட்டி உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து

இசையமைப்பாளர் தேவா

இசையமைப்பாளர் தேவா

வைகாசி பொறந்தாச்சு, புது மனிதன், வசந்தகால பறவை,பாட்ஷா, ரசிகன், ஜல்லிக்கட்டு காளை, தேவா ,நாடோடி மன்னன், அவ்வை சண்முகி, காதல் கோட்டை, அருணாச்சலம், குஷி, சிட்டிசன் உள்ளிட்ட பல வெற்றி படங்களுக்கு இசையமைத்தது தேவா தான்.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

ரஜினி,விஜய், அஜித், சரத்குமார், சத்யராஜ் விஜயகாந்த் தனுஷ் பார்த்திபன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு பல வெற்றி படங்களை முக்கிய பங்காற்றியதோடு திரைப்படங்களிலும் அவ்வப்போது நடித்துள்ளார். உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், சின்ன ராஜா,அடிதடி, மோதி விளையாடு உள்ளிட்ட படங்களில் இடம் பெற்ற பாடல்களில் இசையமைப்பாளர் தேவாவாகவே தோன்றி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

கானா பாடல்கள்

கானா பாடல்கள்

தேவா என்றாலே கானா பாடல்கள் என்றிருந்த காலம் ஒன்று உண்டு. ஆனால் அதே நேரத்தில் மெலோடி பாடல்களையும் அள்ளிக் கொடுத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தார். தற்போது அவ்வளவாக திரைப்படங்களை பணியாற்றாத நிலையில் இசை மற்றும் பிற ஆல்பங்களை வெளியிட்டு வருகிறார்.

சுவாமி தரிசனம்

சுவாமி தரிசனம்

இந்த நிலையில் நேற்று இசையமைப்பாளர் தேவா உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். சுவாமி தரிசனத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்," திருச்செந்தூர் முருகப் பெருமானுக்காகவே கந்த முகமே என்ற ஆல்பத்தை வெளியிட்டுள்ளதாகவும் இதில் இடம் பெற்றுள்ள பல பாடல்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில் அதன் மூலம் கிடைத்த மொத்த பணத்தையும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வழங்கி உள்ளதாக கூறினார். மேலும் இனிவரும் பணம் மொத்தத்தையும் முருகனுக்கே வழங்குவேன் என கூறியுள்ளார்.

English summary
Music composer Deva who became a famous music composer in the Tamil industry, has said that he has given the entire amount earned from his album 'Kanda Mugame' to the temple while Swami had darshan at the Tiruchendur Murugan temple.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X