எ.வ.வேலு கொடுத்த பொன்னாடையை வாங்க மறுத்த நிர்மலா சீதாராமன்! அதிகாரிகளிடம் கறார் உத்தரவு!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் வெள்ளப் பாதிப்புகளை நேரில் ஆய்வுச் சென்ற மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கிய பொன்னாடையை வாங்க மறுத்து பதில் வணக்கம் மட்டும் தெரிவித்தார்.
தாம் கொடுத்த பொன்னாடையை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாங்க மறுத்தது அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தர்மசங்கடமான சூழலை உருவாக்கியது. இருப்பினும் அதனை சமாளித்தவாறு தனது வேதனையை வெளிப்படுத்தாமல் நிர்மலா சீதாராமன் ஆய்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் அண்மையில் தான் ரெய்டு நடந்து முடிந்துள்ள நிலையில் மத்திய அமைச்சரை வாஞ்சையோடு அவர் வரவேற்கச் சென்று இப்படி தர்ம சங்கத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதனிடையே ஸ்ரீவைகுண்டம் கோவிலில் ஆய்வு செய்யச் சென்ற நிர்மலா சீதாராமனிடம், பெருமாள் ஊர்வலம் வரும் தெருவில் கழிவுநீர் ஓடுவதாகவும் தெரு அசுத்தமாக உள்ளதாகவும் அங்கிருந்த வயது முதிர்ந்த ஒருவர் முறையிட்டார். இதனால் டென்ஷனான மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அங்கிருந்த அதிகாரிகளை அழைத்து, இந்தப் புகார் குறித்து கேட்டறிந்தார்.
ஒரு கட்டத்தில் அதிகாரிகள் சிரித்துக் கொண்டு நின்றதை பார்த்து கொதித்துப் போன நிர்மலா சீதாராமன், நான் ஒன்றும் கேலி கிண்டலாக பேசுகிறேன் என நினைத்துவிடாதீர்கள் என கறார் காட்டினார்.பெருமாள் ஊர்வலம் வரும் தெருவை சுத்தம் செய்து கொடுப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என அதிகாரிகளை லெப்ட் அண்ட் ரைட் வாங்கினார்.
நிலைமை மோசமாவதை உணர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் சிரித்தவாறு பேசி அந்தச் சூழலை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தார். புரோகிதர்களுக்கு அரசு அளந்து ரூ.3,000 ஊதியம் கொடுப்பதாக கூறிய நிர்மலா சீதாராமன் அதற்கு வேறு காரணம் இருப்பதாகவும் சூசகமாக தமிழக அரசை சாடினார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications