'பயப்படாதீங்க'.. தமிழ்நாட்டை யாராலும் பிரிக்க முடியாது.. கொங்கு நாடு கேள்விக்கு கனிமொழி பொளேர் பதில்
தூத்துக்குடி : கொங்குநாடு சர்ச்சைக்கு பதில் அளித்த கனிமொழி எம்பி, தமிழ்நாட்டை யாரும் பிரிக்க முடியாது , தமிழ்நாட்டை பற்றி கவலை பட வேண்டாம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தேசவிரோத சக்திகள் என்று மத்திய அமைச்சர் எல் முருகன் கூறிய கருத்து குறித்த கேள்விக்கு தமிழ்நாடு பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
Recommended Video
பிரபல தமிழ் ஊடகத்தில் வந்த ஒரு செய்தியில் மத்திய அரசு கொங்கு நாடு என்று கோவையை தனியாக பிரித்து தனி மாநிலம் அமைக்கப்போவதாக கூறியிருந்தது.
இப்படி ஒரு திட்டம் மத்திய அரசுக்கு இருக்கிறதா இல்லையா என்பது தெரியவில்லை. எனினும் முற்றிலும் தவறான அந்த செய்தியை ஆதாரமாக கொண்டு சிலர் கொங்கு நாடு கோரிக்கைகளை எழுப்பி வருகிறார்கள்.

வாய்ப்புகள் இல்லை
நேற்று ட்விட்டரில் கொங்குநாடு என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வைரலானது. கொங்குநாடு தனிமாநில கோரிக்கை குறித்து ஆளும் திமுக அரசு இதுவரை எந்த கருத்தும் வெளியிடவில்லை. இதேபோல் எதிர்க்கட்சியான அதிமுகவும் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த இரண்டு கட்சிகளுமே ஒரு காலத்தில் கொங்கு மண்டலத்தை தனிமாநிலமாக ஒப்புக்கொள்ள வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது,.

யாரும் பிரிக்க முடியாது
ஏனெனில் இரு கட்சிகளுமே எந்த காலத்திலும் மாநில பிரிவினையை ஆதரித்தது இல்லை. இப்படியான கோரிக்கைகளை பாஜகவினர் மட்டும் சமூக வலைதளங்களில் எழுப்பி வருகிறார்கள். இதுபற்றி செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த திமுக எம்பி கனிமொழி தமிழ்நாட்டை யாரும் பிரிக்க முடியாது , தமிழ்நாட்டை பற்றி கவலை பட வேண்டாம் என்றார்.

மாநில உரிமைகள்
சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துக்கோனின் பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு தூத்துக்குடி தொகுதி எம்பி கனிமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நம்முடைய மாநில உரிமைகள் மற்றும் நலன்களுக்காக திராவிட முன்னேற்ற கழக அரசு தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றார்.

ஒன்றிய அரசு
அப்போது செய்தியாளர் ஒருவர் , மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பதால் , தமிழ்நாட்டை இரண்டாக பிரித்து கொங்கு நாடு என்று தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கபோவதாக செய்திகள் வருகிறேதா என்றார். அதற்கு கனிமொழி, தமிழ்நாட்டை யாரும் பிரிக்க முடியாது. யாரும் அதை பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம்.

யூனியன் ஆப் கவர்ன்மெண்ட்
மத்தியில் இருப்பது நிச்சயமாக ஒன்றிய அரசு அரசு தான். ஏனெனில் அரசியல் அமைப்பு சட்டத்திலே union of government என்று தான் உள்ளது. அதில் ஒன்றும் தவறு இல்லை. இந்த வார்த்தை நாட்டுக்கு எதிரானதும் இல்லை என்றார்.

கனிமொழி பதிலடி
அப்போது மற்றொரு செய்தியாளர், தமிழகத்தில் தேசவிரோத சக்திகள் தென்படுகின்றன என்று எல் முருகன் அண்மையில் பிரதமரை சந்தித்து மனு கொடுத்தார். இப்போது ஆளுநர் நேரில் போய் பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். இதுபற்றி உங்கள் கருத்து என்ன என்று கனிமொழியிடம் கேட்டார். அதற்கு கனிமொழி எம்பி, தமிழகம் பாதுகாப்பானவர்களின் கையில் இருக்கிறது. ஆகவே தமிழகத்தின் பாதுகாப்பை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications